சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மீன்பாடும் தேன்நாட்டில் ஆலயங்கள் பல நிறைந்து காணப்பட்டாலும், அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது. அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் முன்னர் மாமாங்கேஸ்வரர் எனும் பெயருடன் சிவன் ஆலயமாகவும் பிற்காலத்தில் பிள்ளையார் ஆலயமாகவும் கொள்ளப்பட்டது.
அக்காலத்தில் மெய்யடியார் ஒருவருக்கு இறைவனே கனவில் தோன்றி பிள்ளையாருக்கு ஆராதிக்கும்படி கட்டளையிட்டதாகவும் அப்போதிருந்து இங்கு பிள்ளையாருக்கு பூசைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு இவ்வாலயத்தின் வண்ணக்கராக இருந்த த. நாகையா என்பவரால் வெளியிடப்பட்ட மட்டுநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயம் பின்னர் பிள்ளையார் ஆலயமாக ஆனது அல்லது ஆக்கப்பட்டது என்பதற்கு நாமறிந்த வரையில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இங்கு கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். இதை இன்றும் ஆலயத்தில் நேரில் காணலாம்.
மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம், இராஜகோபுரம், கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இவ்வாலயத்தில் தற்போது ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவமும், தீர்த்தோற்சவத்திற்கு முதல் நாள் தோரோட்டமும் நடைபெற்று வருகின்றது. இங்கு தற்போது ஒன்பது நாட்கள் திருவிழாவாக இடம்பெற்றுகின்றது மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்தவருமான இ.தங்கராசா என்பவரின் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலில் இராமர் அனுமான் காசி முனிவர் ஆடகசவுந்தரி ஆகியோருடன் இந்த ஆலயத்துக்கு வரலாற்று தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ் ஆலயம் பற்றி பல வரலாறுகளை அவர் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவபூசை செய்வதற்கு இவ்விடத்தில் தரித்த இராமர் சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரும்படி அனுமானை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் அவன் தாமதிக்கவே மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டதாகவும் பின்னர் அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை கதாயுதத்தை ஊன்றிய இடத்தில் பதித்ததாகவும் மாமாங்க தீர்த்தத்தின் மகிமைக்கு அதுவே காரணம் என்று ஒரு வரலாறும்.
இலங்கேஸ்வரனை வெற்றிவாகை சூடி இராமன் அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் தரித்து மண்ணால் சிவலிங்கம் செய்து கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி தீர்த்தம் பெற்று அதனை அபிசேகம் செய்து வழிபட்டதாகவும் அந்த லிங்கமே ஆலயத்தில் வழிபடப்படுவதாகவும் தீர்த்தம் பெற்ற இடமே தீர்த்த குளம் எனவும் ஒரு வரலாறு உள்ளது.
இவ்வாறு இராமர் வழிபட்ட லிங்கம் காடு வளர்ந்து மறையுண்டிருந்த நிலையில் அவ்விடத்துக்கு களைப்பு நீங்க வந்த வேடன் ஒருவன் கண்ணயர்ந்தபோது லிங்கம் பற்றி தரிசனம் கிடைக்கவே அவன் லிங்கத்தை கண்டுபிடித்து கொத்துப்பந்தல் அமைத்து வழிபட்டு கோயிலானது என்றும் கூறுப்படுகிறது. கிழக்கிலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்கள் யாவும் இவ்வாறு சில சம்பவங்ளுடன் தொடர்புபட்டுள்ளதை அறியக்கூடியதாகவுள்ளது.
பொதுவாக வித்துவான் வீ. சீ. கந்தையா,கவிஞர் செ. குணரத்தினம்,கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை ஆகியோரின் நூல்களிலும் பாடல்களிலும் மண்டூர், கொக்கொட்டிச்சோலை, மாமாங்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் மரங்களோடும் வேடருடனும் தொடர்புபட்டுள்ளதை காணலாம்.
இவற்றை நாம் நோக்கும்போது, மண்டூர் கொக்கொட்டிச்சோலை மாமாங்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் மரங்களோடும் வேடருடனும் தொடர்புபட்டுள்ளதை அறியமுடிகின்றது.
அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், நற்றண்ணீர்மடு, இவ்வாறாக பல தீர்த்தங்களின் சங்கமத்துடன் சந்தனச் சேறு நிறைந்த அமிர்தகழி- மாமாங்கத் தீர்த்தம் தீராத நோய்களை தீர்க்கும் அருள் மிக்கது. ஆடகசவுந்தரி என்னும் அரசி இக்குளத்தில் நீராடி மார்பகம் போன்றிருந்த மச்சம் நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இவற்றை நாம் நோக்கும்போது, மண்டூர் கொக்கொட்டிச்சோலை மாமாங்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் மரங்களோடும் வேடருடனும் தொடர்புபட்டுள்ளதை அறியமுடிகின்றது.
அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், நற்றண்ணீர்மடு, இவ்வாறாக பல தீர்த்தங்களின் சங்கமத்துடன் சந்தனச் சேறு நிறைந்த அமிர்தகழி- மாமாங்கத் தீர்த்தம் தீராத நோய்களை தீர்க்கும் அருள் மிக்கது. ஆடகசவுந்தரி என்னும் அரசி இக்குளத்தில் நீராடி மார்பகம் போன்றிருந்த மச்சம் நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
மாமாங்கப் பிள்ளையாரின் உற்சவத்தில் கலந்து அவரின் அருளைப்பெற பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபுறம் இருந்தும் மக்கள் இங்கு குழுமுவர். மரணித்த பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக ஆடி அமாவாசை விரதம் இருந்து தீர்த்தமாடி அமுது படைத்து அன்னதானம் வழங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தின்போது ஆடி அமாவாசை பலன் பெற திரளும் மக்களின் அரோகரா கோஷம் மெய்சிலிர்க்க வைக்கும்.
சூரியனும் சந்திரனும் கூடும் காலம் அமாவாசை எனப்படுகின்றது. ஆடி அமாவாசையில் பிதிர் கடன் கழிக்க, இறந்த தாய் தந்தையரை நினைத்து பூசித்து வழிபடுவதற்கு ஆடி அமாவாசை உகந்த காலமாக கொள்ளப்படுகிறது. இதனால் மட்டுநகரில் மாமாங்க தீர்த்தம் பிரசித்தி பெற்றுள்ளது.
சூரியனும் சந்திரனும் கூடும் காலம் அமாவாசை எனப்படுகின்றது. ஆடி அமாவாசையில் பிதிர் கடன் கழிக்க, இறந்த தாய் தந்தையரை நினைத்து பூசித்து வழிபடுவதற்கு ஆடி அமாவாசை உகந்த காலமாக கொள்ளப்படுகிறது. இதனால் மட்டுநகரில் மாமாங்க தீர்த்தம் பிரசித்தி பெற்றுள்ளது.
ஆன்மாவானது ஆண்டவனுடன் லயப்பட பிறர் நன்மைக்காக முடிந்தளவு நல்லதை செய்வோம். மாமாங்கப் பிள்யையாரின் அருளைப் பெறுவோம். ”உள்ளக் கமலமடி உத்தமநார் வேண்டுவது..” என்பதற்கேற்ப நாம் அள்ளிக்கொடுத்தாலும், விழுந்து வணங்கினாலும் நம் ஒவ்வொருவரின் தூய்மையான நல் உள்ளத்தைத்தான் இறைவன் விரும்புகின்றான்.
”மாமாங்கேஸ்வரர்” ஒரு வரலாற்று குறிப்பு
Reviewed by Viththiyakaran
on
10:11 AM
Rating:
No comments:
Post a Comment