வின்சன்ட் மகளிர் பாடசாலை வரலாற்றுசாதனை படைப்பு


வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்ப வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை வரலாற்று சாதனையினை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 42 மாணவின் 09 ஏ சித்திகளைப்பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

இன்றுவெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 21 மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஐந்து மாணவிகள் ஏழு ஏ சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 99.3வீதமான மாணவிகள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்ப வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி சரணியா சுபாகரன் தெரிவித்தார்.

இதன்போது மாணவர்களுக்கு பெற்றோர்,ஆசிரியர் வாழ்த்து தெரிவித்ததுடன் நலன்விரும்பிகளினால் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வின்சன்ட் மகளிர் பாடசாலை வரலாற்றுசாதனை படைப்பு  வின்சன்ட் மகளிர் பாடசாலை வரலாற்றுசாதனை படைப்பு Reviewed by Viththiyakaran on 11:40 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.