மலரவுள்ள கிழக்கிஸ்தான் பற்றிய பதிவுகளும் திருமலை விடயமும்

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்ற விடயமாக திருகோணமலையில் பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற ஆசிரியர்கள் அணியும் ஆடை பற்றிய விடயம் காணப்படுகின்றன.இதில் எமக்கு பாடசாலையில் நடைபெற்ற விடயம் பற்றிய சரியான மற்றும் உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் குறித்த விடயத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் தவறான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சிலர் பரப்பிவருகின்றனர். இவ்விடயம் தொடர்பாகவே நாம் ஆராயவுள்ளளோம்.

இது குறித்து மேலும் தெரிய வருவது யாதேனில் இன்று திருகோணமலையில் குரலற்ற ஆசிரியர்களுக்கு குரல்கொடுக்கின்றோம் என்கின்ற தொனிப் பொருளில் ஓர் ஆர்பாட்டம் இடம் பெற்றுள்ளது .இதன் போது சகோதர இன மக்கள்  உலக மகா ஆபாச ஆடை சேலை என்று பொறிக்கப்பட்ட பதாதகைகளை தாங்கிருந்தனர்.அவர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவது


  • ஆபாசம் உருவாகுவது ஆடையில் எனில் மேற்கத்தைய நாடுகளில் எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைளே நடைபெறுகொண்டிருக்கும்.காரணம் மேற்கத்தைய பெண்கள் சிறிய சிறிய ஆடைகளையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.ஆகையால் மேற்கத்தைய நாடுகளில் வீதிக்கு வீதி கற்பழிப்புச் செயல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும்.ஆனால் அப்படி ஒன்றுமே நடைப்பதில்லை காரணம் ஆடைகள் ஆபாசத்தினை உருவாக்குவதில்லை.

  • ஒரு குழந்தை பிறந்து வளரும் போது அவனது குடும்பத்தில் கற்கின்ற விடயங்களே அவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகின்றது.அதாவது ஒருவன் தவறான நோக்கத்தில் ஒரு பெண்னை பார்க்கும் போது அப் பெண் எவ்வளவுதான் ஆடைகளை சுற்றி சுற்றி அணிந்திருந்தாலும் அது அவனுக்கு ஆபாசமாகவே தோன்றும்.

குறித்த விடயத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக் கொண்டு மற்றுமொரு குழுவினர் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகப்புத்தகத்தில் சேலை அணிந்த பெண்களின் அந்தரங்கப்பகுதிகளை சுட்டிக்காட்டி அப் பெண்கள் இதற்காக தான் சேலை அணிகின்றனர் என பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் தெளிவுபடுத்த இக் கூட்டத்திற்கு விரும்புவது


  • உங்களது புனித மார்க்கம் பெண்களை தொட்டுப் பேசுவதனையே தவறு எனக் கூறும் போது அப் புனித மார்க்கத்தினை பின்பற்றுகின்ற ஒரு சில விஷமிகள் சேலை அணிந்த பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை அவர்களுக்கே தெரியமால் நிறங்களினால் சுட்டிக் காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவினை மேற்கொண்டுள்ளார்கள். இதனைத்தான உங்கள் மார்க்கம் போதிக்கின்றது. இவ்வாறான விஷமிகளால் தான் இப் புனித மார்க்கத்திற்கு அவப் பெயர் உண்டாகின்றது. இதனை பிற சகோதர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • இறந்தவர்கள் பற்றிய வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு எமது வாழ்க்கையினை செம்மைப் படுத்திக் கொள்ளமால் அவர்கள் பற்றிய அவதூறான செயல்களை மேற்கொள்ளவது எவ்வகையில் நியாயமானது.

  • வித்தியாவின் கொலை வழக்கானது எமது நாட்டில் பெண்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு என்ன நிகழும் என்கின்ற தீர்வினை வெளிக்காட்டியது. இதன் மூலம் குறிப்பாக தமிழ் பேசும்  பெண்களுக்கு பாதுகாப்பு வட்டம் ஒன்று உருவாகியுள்ளது. இந் நேரான எண்ணம் பற்றி ஒரு போதும் எமது சகோர இன   நண்பர்கள் பேசுவில்லை ஆனால் அதற்கு முழு மாறாக தவறான எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு தற்போது பேசுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக எமது சகோதர இன சில விஷமி  நண்பர்களின் மனதில் உள்ள உடை தொடர்பான எண்ணங்கள் வெளிவந்நதுடன் மற்றுமொரு முக்கிய விடயமும் வெளி வந்துள்ளது. அதுதான் மிகவும் அதிர்சிக்குள்ளான விடயம் 'கிழக்கிஸ்தான்' . இதன் மூலம்  வெளிப்படுத்துவது பாக்கிஸ்தான் போன்று சகோதார இனத்தினரை மட்டும் கொண்ட கிழக்கு மாகாணத்தினை உருவாக்க முற்படுகின்றனர் என்பது மிக தெளிவாக விளங்குகின்றது.








குறிப்பு :- இப் பதிவு பிறரினை ஏளனப்படுத்துவற்காகவோ அல்லது அவமானபடுத்துவற்காகவோ அல்ல 
மலரவுள்ள கிழக்கிஸ்தான் பற்றிய பதிவுகளும் திருமலை விடயமும் மலரவுள்ள  கிழக்கிஸ்தான் பற்றிய பதிவுகளும் திருமலை விடயமும் Reviewed by Viththiyakaran on 12:06 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.