கல்லடிப்பாலமும் முகநூலும்

ஒருகாலத்தில் 24 மணிநேரமும் simplex எனப்படும் ஒருவழிப்பாதை முறையாக இருந்த முக்கிய புள்ளி தற்போது நவீன உத்திகளின் உதவியுடனான விஸ்தரிப்பின் மூலம் duplex எனப்படும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டதுடன்  நம்பாரம்பரிய ஒருவழிப்பாதை வெறிச்சோடியது. இதற்கு பின்னரான காலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மட்டக்களப்பு விஜயத்திற்கான அடையாளமாகக் காட்டமுற்படும் புகைப்படங்களின் பின்னணியானது.






புதிய பாலத்தின் கட்டுமானப்பணிகளுடன் மக்களிடன் அதிகவரவேற்பும் முகநூலில் சிறு அளவிலான அறிமுகத்தையும் கொண்டிருந்தது திறப்புவிழாவுடன் முகநூலில் பரலவலான நெருக்கத்தை பெற்றிருந்ததை அறியலாம்.

பின்னர் கடந்த சிலவருடமாக இந்தப்புள்ளி மீண்டும் புத்துணர்வு பெற்றது.அதற்கு ஊக்கம் கொடுத்தவிடயமாக மட்டு இளைஞர்களின் பலவீனத்தைப் பார்க்கலாம்.

ஆம் தற்கொலைகள்,

முன்பெல்லாம் தற்கொலை செய்தால் எதிர்பாராத திடீர் செய்தியாக இருந்தது அதிலும் கல்லடிப்பாலத்தில் என்றால் கொஞ்சம் ஒருபடிமேலே இருந்தது.

சற்று தற்கொலைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்க குறிப்பாக பாலத்தில் நடக்கும் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே இருந்தது. இவற்றிற்கு சமாந்தரமாக முகநூலிலும் தற்கொலைகள் வளர்ந்தன அதாவது முன்பெல்லாம் வெறும் செய்தியாக ஒரு போஸ்ட். பின் தற்கொலைகளின் அதிகரிப்புடன் போஸ்டுகளும் அதிகரித்தன விதமும் மாறியது. 

பாலத்தில் தற்கொலை செய்வது சார்ந்த பல தகவல்களும் கட்டுரைகளும் பல ஊடகங்களில் முக்கியமாக முகநூலில் பகிரப்படுகின்றன பேசப்படுகின்றன நீங்கள் தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரையும் இவ்வகைக்குள் அடங்கும். தற்கொலைகளை தடுக்க பலரும் பல வழிகளை பகிர்ந்தாலும் அவ் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு தெரிவித்து பலரும் பல காரணங்களை தெரிவிக்கவே செய்கின்றனர். என்னதான் நாம எல்லாரும் என்னத்த கதைச்சாலும் நடக்குறது நடக்கத்தான் போகுது ஆனா யாராவது எதாவது செய்ய சொல்லல.. ஆனா ஒன்னும் செய்யாமல் இருக்காதிங்க எண்டுதான் சொல்றன்

இவைகள் மட்டுமல்லாமல் நாம் சம்பவம் நடந்து சில நிமிடங்களில் பாலத்தில் இருந்து ஒரு நேரடி வீடியோவும் (Live) போடுகிறோம். எதிர்காலத்தில் நபர் பாலத்திலிருந்து பாய்வதை லைவ் போட மாட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாததே. இதற்கு அடுத்தகட்டமாக தற்கொலை செய்வதற்கு முன்பதாக போஸ்ட் போடும் நிலைமையும் ஏற்படுகிறது. 

நம்மில் பலருக்கும்  "பாலத்தில் தற்கொலையாம்" எனும் பதத்தை கேட்டு சலிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. உதாரணமாக இறுதியாக நடந்த தற்கொலையின் போது நண்பர் ஒருவருக்கு அவரின் தாயார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "எங்க இருக்கா மகன்? "என்று கேட்க "பாலத்தில யாரோ பாய்ததாம், சரியான சனம் அங்கதான் நிக்கன்" எண்டு சொல்ல. உடனே தாய் "அதுதான் ஒரே நடக்குதே நீ பாயாம இருந்தா சரிதான்" என்று கதைக்குமளவிற்கு நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

கல்லடிப்பாலமும் முகநூலும் கல்லடிப்பாலமும் முகநூலும் Reviewed by Pavithran Manisegaran on 11:51 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.