இரவில் உருமாறும் கல்லடிப் பாலம்


மட்டக்களப்பு என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருகின்ற விடயம் எமது கல்லடிப்பாலம் தான்.காரணம் கல்லடி மற்றும் மட்டக்களப்பு நகரினை இணைக்கின்றதாகவும் பாலத்திலிருந்து மேற்கே பார்க்கும் போது போர்த்துகேய கோட்டையையும் கிழக்காக வங்காள விரிகுடா காணப்படுவதாலும் மற்றும் ஆங்கிலேயரின் காலத்தில்  கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதாக காணப்படுவதினாலேயாகும்.இவ்வாறு சிறப்பு வாய்ந்த கல்லடிப் பாலமானது  சனத்தொகை மற்றும் வாகன அதிகரிப்பினால்  புதியதாக  2013 நிர்மானம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.

புதிய பாலம் அமைக்கபட்டதும் பழையபாலம் சிறு வாகனங்கள் பாவனைக்கும் சுற்றுலாத் தளமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இரவில் எமது கல்லடிப் பாலமானது மீனவர்களுக்கு வாழ்வாதாரமளிக்கும் ஒர் மேடையாக பயன்படுகின்றது.


ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முதல் கல்லடிப் பாலத்தில் தற்கொலைகள் அதிகரித்த போது  அதனை தற்கொலைப் பாலம் என பலரும் சொல்லி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.  ஆனால் கல்லடிப் பாலத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி யாருமே கவனித்தில் கொள்ளவில்லை என்பது வருந்ததக்க விடயம்
இரவில் உருமாறும் கல்லடிப் பாலம் இரவில் உருமாறும் கல்லடிப் பாலம் Reviewed by Viththiyakaran on 7:38 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.