உலக புவி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கல்லடி கடற்கரையில்

எமது மட்டக்களப்பு பிரதேசத்தில் வளர்ந்து வரும் இளைஞர் அமைப்பு  நிறுவனங்களில்  SYLC ஒன்றாகும்.இவ்வமைப்பானது உலக  புவி தினம் சித்திரை 22 அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் உலக புவி வாரம் இன்றிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதன் ஆரம்ப நிகழ்வாக SYLC நிறுவனத்தினர் கல்லடிக் கடற்கரையில் விளையாட்டின் ஊடான புவியினை பாதுகாக்கும் செயற்பாடுகளை  மேற்கொண்டனர்.

இது குறித்து அந் நிறுவனத்தின் பணிப்பாளரி திரு.நிதுசன் குறிப்பிடுகையில் தற்போது உலத்தில் பிளாஸ்டிக்  மூலமாக அதிகமாக கடல்கள் அதிகமாக பாதிப்புறுவதாகவும் 2050 ஆகும் வேளையில் கடல்களில் முழுவதுமாக பிளாஸ்டிக் பெருகிவிடும் எனவும் தற்போது உலகில் பிளாஸ்டிக் கடல் உள்ளதாகவும் அக் கடல் முற்றுமுழுதாக பிளாஸ்டிக்கால் நிரப்பபட்டுள்ளதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுவதாக கூறினார்.ஆகவே எமது எதிர்கால சந்ததியினருக்காக புவியினை பாதுகாக்கவேண்டியது மிக அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
























உலக புவி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கல்லடி கடற்கரையில் உலக புவி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கல்லடி கடற்கரையில் Reviewed by Viththiyakaran on 10:14 PM Rating: 5

Post Comments

Powered by Blogger.