அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிப்பதற்கு ஒன்றினைவோம்

கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ள சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது..

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ளார் இச் சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது.




இதனை ஒரு செய்தியாக கருதாமல் அதற்கு அப்பாலும் சென்று 

சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஊடகவியளாளர் சயன் இராமகிருஷ்ணன் இணையத்தளத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனுக்களை அனுப்பும் வகையில் மனுத்திரட்டுச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இச் செயற்பாட்டில்  நாமும் பங்கெடுத்துக் கொள்வோம்

பங்குகொள்ள அழுத்துக


அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிப்பதற்கு ஒன்றினைவோம் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிப்பதற்கு ஒன்றினைவோம் Reviewed by Viththiyakaran on 7:29 PM Rating: 5

Post Comments

Powered by Blogger.