மட்டக்களப்பு எல்லைப்புற கிராமங்களில் ஒன்றான மஞ்சதொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பின் முயற்சியினால் மீண்டும் சமயம், கலை மற்றும் பாரம்பரிய விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அறநெறி வகுப்புக்கள் கடந்த 18ம் திகதி தைமாதம் ஆரம்பமாகின.
இதன் போது மட்டக்களப்புக் கிளை இராமகிருஸ்ணமிசன் தலைவரும் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர். இந் அறநெறி வகுப்பின் மூலம் 60 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயனடைந்துகொள்வார்கள்.
இவ் அறநெறி வகுப்புக்கள் கடந்த சில வருடங்களில் தவிரக்கமுடியாத காரணங்களினால் நடைபெறவில்லை ஆனாலும் மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பின் மூலம் மீண்டும் புத்துருவாக்கத்துடன் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதேனில் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் மற்றும் காலையுணவு என்பன மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பின் மூலமும் மற்றும் பிரதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வழங்கிவருகின்றன. இதன் ஊடாக மஞ்சந்தொடுவாய் பிரதேச மக்களின் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்படுகின்றது.
மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பின் எதிர்கால நோக்கமாக அறநெறிவகுப்புக்களுடன் மற்றும் நின்றுவிடாது எதிர்கால சந்ததியினருக்குரிய கல்வி மற்றும் தொழித்துறைசார்ந்த விடயங்களையும் பெற்றுக்கொடுப்பதாகும்.
மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அறநெறி வகுப்புக்கள்
Reviewed by Viththiyakaran
on
6:34 AM
Rating:
Reviewed by Viththiyakaran
on
6:34 AM
Rating:






No comments:
Post a Comment