முதன்முறையாக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே இடத்தில் சந்திப்பு - குறை கூறவில்லை பிழைகளை திருத்திக் கொள்வோம்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கி தமிழ் மக்களின் அதியுச்ச வாக்குகளைப் பெற்று மாகாணசபையில் அதிகூடிய தமிழர் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக அனைத்து தமிழ் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியது. அதன் நிமித்தமாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டியதான கலந்துரையாடல் புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடிலில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, டெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற 11 கட்சிகளின் பரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்புக்கு 12 தமிழ் அரசியற் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன  இதில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இச்சந்திப்பு முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணும் முயற்சியாகும் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்பதை மனம் கொண்டால் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணமுடியும். கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும்.

கிழக்குமாகாணத்தில் இன்று நிலவும் களநிலையில் கிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர் முரண்பாடுகளுக்கு அப்பால் கருத்தியல் முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ் ஒரே அணியாகத் திரள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

குறிப்பாக எதிர்வரும் கிழக்குமாகணசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகச் செயற்படவேண்டும் என்பதே கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் தீர்மானமும் கோரிக்கையுமாகும். இதனைச் சாத்தியமாக்கும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே சந்தித்து அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துள்ளோம். கிழக்குத்தமிழர் ஒன்றியம் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அனைத்துத்தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரே இடத்தில் சந்தித்துப் பேசும் ஏற்பாடே இது. கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கை குறித்து அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் கூடி உடன்பாட்டு ரீதியாக கலந்துரையாடி மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான முன்முயற்சியே இச்சந்திப்பாகும்.

அம் முயற்சி வெற்றி பெற இறைவனை பிராத்திக்துக் கொள்வதோடு வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கின்றோம்.




தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக பன்னிரெண்டு கட்சிகள்( 12) 

சாதாரணமாகவே  ஊர் இரண்டு பட்டால்  கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கின்ற பழமொழிக்கமைய இங்கு ஊர் பன்னிரெண்டு பகுதிகளாக காணப்படுகின்றது அப்போது கூத்தாடிக்கு கொண்டாட்டம் அல்லது அதற்கும் மேல் குதூகலமும் கும்மாளமாகத்தான் இருக்கும்.

அடிப்படை கொள்கைகள், கோட்பாடுகள்

இக் குறிப்பிட்ட சந்திப்பின் போதுதான் தமிழ்மக்களின் பாதுகாலவர்கலாக பன்னிரெண்டு கட்சிகள் இருப்பது தெரியவருகின்றது. இக் கட்சிகளின் அடிப்படை கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தமிழ் மக்களை பாதுகாத்து அவர்களது அபிலாசைகளை  நிறைவேற்றிக் கொடுப்பதாக காணப்பட்டாலும்  தங்களது சுய லாபத்திற்காகவா ? இவ்வாறான 12 பிளவுகள்.

அடுத்த சந்ததியினருக்கு

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு ( மிதவாதியாக ) யாரை பயிற்றுவித்து அல்லது அரசியல் தந்திரோபாயங்களைச் கூறி அடுத்து சந்நதியினருக்காக உருவாக்கி வருகின்றனர் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒர் கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசியல் கட்சி தலைமைகள்


சுமார் பத்து வருடங்கள்  அல்லது அதற்கும் மேல் முதலிருந்த அரசியல் தலைமைகளே  இக்கூட்டதிலும் கலந்து கொள்கின்றனர்.இதிலிருந்து புலனாவது என்னவேன்றால் தமிழ்மக்களுக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் ஒன்றையும் சரியான முறையில் செய்யதாக தெரயவில்லை.


அத்துடன் சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் யார் யார் என்று கூட  சாதாரண மக்களுக்கு தெரியாத நிலையும் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது.


குறிப்பு

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக மேலும் கட்சிகள் இருக்கலாம்  பெயர் குறிப்பிட தவறியிருந்தால் மன்னிக்கவும்.

தமிழ் மக்களுக்காக பலவகையான நன்மைகளை செய்திருக்கலாம் பிற இன,சமூக அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் எமது நிலை சற்று குறைவு





முதன்முறையாக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே இடத்தில் சந்திப்பு - குறை கூறவில்லை பிழைகளை திருத்திக் கொள்வோம். முதன்முறையாக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே இடத்தில் சந்திப்பு - குறை கூறவில்லை பிழைகளை திருத்திக் கொள்வோம். Reviewed by Viththiyakaran on 11:41 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.