கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் அரசியல் அடிமையாகும் நிலையே தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்களின் 30 வருட ஆயுத போராட்டம் 30 வருட அரசியல் போராட்டங்களின் விழைவாக கிடைத்த ஆகக்குறைந்த அதிகாரமான மாகாணசபை முறைமையினையும் கிழக்கு தமிழர்கள் அனுபவிக்க முடியாது வேடிக்கை பார்க்கும் நிலையினை மாற்றி 2008-2012 வரை எமது கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழரின் இருப்பை நிலைநாட்டியதுடன் இன,மத,மொழி பேதமின்றி சமத்துவமான ஆட்சியும் நடாத்திக்காட்டினார்.
தமிழர்களின் 30 வருட ஆயுத போராட்டம் 30 வருட அரசியல் போராட்டங்களின் விழைவாக கிடைத்த ஆகக்குறைந்த அதிகாரமான மாகாணசபை முறைமையினையும் கிழக்கு தமிழர்கள் அனுபவிக்க முடியாது வேடிக்கை பார்க்கும் நிலையினை மாற்றி 2008-2012 வரை எமது கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழரின் இருப்பை நிலைநாட்டியதுடன் இன,மத,மொழி பேதமின்றி சமத்துவமான ஆட்சியும் நடாத்திக்காட்டினார்.
ஆனால் 2012 இன் பின்னரும் 2015 இன் பின்னரும் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். தமிழர்கள் கிழக்கில் நில,நிருவாக,நிதி ரீதியாக எப்படி நசுக்கப்படுகின்றனர் என்றும் தெரியும். யார் சரி,யார் பிழை ,என்று பார்ப்பதற்கான நேரமல்ல இது. எது சரி, எது தவறு என்றே பார்க்க வேண்டும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கும் இங்கு கொள்கைகளைப் பற்றி பேசி கிழக்கு தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது.
2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின்னர் கொள்கை பேசியதன் விளைவு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி அன்று தோல்வியடைந்ததன் விழைவுவை செங்கலடி பிரதேச சபையின் செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
1881ம் ஆண்டு கிழக்கில் 58.96 வீதமாக இருந்த தமிழர்களின் வீதமானது 1981ம் ஆண்டு 42.06 வீதமாகவும் 2012ம் ஆண்டு 39.79வீதமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் 617295 தமிழர்களும் 569738 முஸ்லீம்களும் 359136 சிங்களவர்களுமாக இன ரீதியான 1551381சனத்தொகையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 49456 மேலதிக சனத்தொகையுடனேயே தமிழர்கள் கிழக்கில் 1ம் இடத்திலுள்ளனர்.இந் நிலை இன்னும் 5 வருடத்திலேயோ அல்லது 10 வருடத்திலேயோ மாற்றமடையலாம்.
எனவே அரசியல் கட்சிகள் வடக்குடன் ஒப்பிட்டோ அல்லது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டோ காலத்தை போககுவதை ஒத்திவைத்து கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலம் குறித்து திறந்த மனதுடன் இதயங்களை பேசவைக்க வேண்டும். வாய் வார்த்தையால் பேசிவிட்டுச் செல்லக்கூடாது. கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்பிற்காக வலுவான எதிர்காலத்திற்காக எவ்விதமான ஏற்றுக் கொள்ளக்கூடிய விட்டுக் கொடுப்புகளுடனும் பேசுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழர்களின் இனவிருத்தி வீழ்ச்சி வரட்டுக் கௌரவம் பார்த்தால் அடிமையாகும் நிலையே தோன்றும்
Reviewed by Viththiyakaran
on
10:36 PM
Rating:
No comments:
Post a Comment