கல்லடியில் காணப்படும் 'தேத்தாக் கிழவன் '


மட்டக்களப்பின் முகப்புப்போல் பிரயாணம் செய்பவர்களுக்கு முதலில் கண்ணுக்குத் தோன்றுவது கல்லடி வேலாயுத சுவாமி  கோயிலாகும். மட்டுநகரிலிருந்து தெற்கு நோக்கி  கல்முனைக்குச் செல்லும்  நீண்ட பாதையில் நீண்டு கிடக்கும் கல்லடிப் பாலத்தை தாண்டிய பின்னர் முதலாவதாகச் சற்று தூரத்திற்கு அப்பால் தெரிவது இக் கோயிலாகும்.

கிழக்கிலங்கையில் உள்ள மிகப் பழமையான  ஆலயங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாலயம் காலத்தால் பிந்தியது எனினும் அருட்சிறப்பிலும்  தல மகிமையிலும்  பெரிதும் சிறந்து விளங்கும் ஆலயமாக திகழ்கின்றது. இவ்வாலயம் மட்டக்களப்பு மாநகர சபை எல்லையினுள் அமைந்த கல்லடியில் பழைய கல்முனை வீதிக்கும் புதிய கல்முனை வீதிக்கும் இடையில் அழகுற அமைந்துள்ளது.

இக் கோயில் ஆரம்பித்த  காலத்தில் இத்தலமானது காடுகள் அடர்ந்து கல்முனைக்குச் செல்லும் பழைய வீதியை மாத்திரம் கொண்டிருந்தது.இக் கோயிலானது நூற்றாண்டின் ஆரம்பமான 1901 இல்  இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் காணப்படும் தேத்தாமரத்திற்கும் இவ்வாலயத்திற்கும் இடையே மிக நெருங்கி தொடர்பு காணப்படுகின்றது. அதாவது நெடுநாள் நோயினால் பாதிக்கப்பட்டு  வருந்தி  வந்த கந்தவேற்பிள்ளை கந்தசஸ்டி விரத்தை  கடைப்பிடித்த  நாட்களில் இத் தேத்தா மரத்தில் இருந்து வெளிப்பட்ட இறைவன் அவருக்கு நோய் தீர்வதற்கான மருந்துகளை வழங்கியமை இவ்வாயத்திற்கும் தேத்தாமரத்திற்கும் உள்ள தொடர்புனை சுட்டிக்காட்டுகின்றது.

1901 இல்  நடைபெற்ற இவ் அற்புத நிகழ்ச்சியே  இவ்வாலயத்தின் ஆரம்பக்கால்கோளாக அமைந்தது. அன்று அருகில் அமைந்த  சித்தி விநாயகர் ஆலய அச்சகரது கனவில்  முருகப் பெருமான் தேத்தா மரத்தடியில் ஒரு பீடத்தை அமைத்து விடும்படி தெரிவித்துள்ளார். அச்சகர் கனவும் கந்தவேற்பிள்ளைக்கு நடந்த அற்புதமும் ஊர் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தேத்தமரத்தடி நிழலில் முருகனுக்கு பீடம் அமைக்கப்பட்டது.

கல்லடியைச் சேர்ந்த  தோ.ஞ. சின்னத்தம்பி என்பவர்  கோயிலை பெரிதாக அமைக்கும் பணியை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தேத்தமரத்தடி பீடத்தை மாற்ற வேண்டாம் என அச்சகர் கனவில் முருகப் பெருமானால் உரைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக சித்தி விநாயகர் ஆலயத்தில் பூவும் போட்டுப் பார்க்கப்பட்டது. இதன் போதும் பீடத்தை மாற்றக் கூடாது என்றே பூப்பரிட்சையும் காட்டியது. எனவேதான் பழைய பீடத்துடன்  இணைக்கப்பட்டதாகவே  சிறிய ஆலயமாக அமைக்கபட்டு பூசைகள் நடைபெற்றன. இன்றும் கல்லடி வாழ் மூதாட்டிகள் எம் பெருமானை  'தேத்தாக் கிழவன் ' என்றே அன்பாக அழைப்பர்.

1927ம்  ஆண்டு முதல்  வருடாந்த திருவிழாக்களும்  சமுத்திர தீர்த்தோற்சவமும் ஆரம்பிக்கப்பட்டன. வைகாசித் பௌர்ணமிக்கு  முன் அமைந்த 6 நாட் திருவிழாக்களும், சுவாமி ஊர்வலம் வருதலும், பௌர்ணமி தின அருணேதய வேளையில் தீ மிதிப்பும் வைபவமும், சமுத்திர தீர்த்தமும் நடைபெறுவது ஒழுங்காயிற்று. வருடத்திற்கு வருடம்  இவ் வருட உற்சவம் சிறப்பும் தரமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனது.மிகக் குறுகிய காலத்தில் எம் பெருமான் கீர்த்த நாலாம் பக்கமும் பரவியது. 1978 இடம் பெற்ற சூறாவளி அனர்த்த்தின் போது இவ்வாலயத்தின் முன் பகுதி சேதமுற்ற போதும் மூலஸ்தானம் சேதமுறவில்லை.விரிவா முறையில் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆலயம் 1982 இல் மகா கும்பாவிசேகம் செய்து வைக்கப்பட்டது.


இங்கு தினப்பூசைகள்  நடைபெறுவதுடன் வெள்ளிக்கிழமை பூசைகள் தோறும் விசேட பொங்கல் அபிசேகங்களும்  நடைபெறுகின்றன. வருடாந்த திருவிழாக்களைத் தவிர, கந்த சஸ்டி விரத காலத்தில்  பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு காப்புக்கட்டி விரதம் அனுஸ்டிப்பர்.குமாராலய தீபம் , கந்த சஸ்டி திருவிழா, மணவாளக் கோல திருவிழா ஆகியவை விசேட  ஆராதனைகளாக அமைந்துகள்ளன.
கல்லடியில் காணப்படும் 'தேத்தாக் கிழவன் ' கல்லடியில் காணப்படும் 'தேத்தாக் கிழவன் ' Reviewed by Viththiyakaran on 11:49 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.