1. வைத்தியர்களின் அசமந்த போக்கு
உயிரை காப்பாற்றுவர்கள் என நம்பிவரும் மக்களின் நம்பிக்கையினை உடைக்கும் வகையில் ஒரு சில வைத்தியர்களின் போக்குகள் காணப்படுகின்றமை. குறிப்பாக உரிய நேரத்திற்கு உரிய நோயாளிக்குரிய மருத்துவ உதவிகள் கிடைக்காமை. மேலும் நோயினால் அவதியுறும் அல்லது விபத்துக்குள்ளானவரை பொறுக்குரிய வைத்தியர் மேற்பார்வையின்றி பயிலுனர் வைத்தியர்கள் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றமை .
2. வைத்தியாலையில் உபகரண குறைபாடுகள்
கடந்த காலங்களில் CT SCANNER, MRI SCANNER தொடர்பான பலநூறு சம்பவங்கள் பேசுபொருளாகுவதும், கடந்து செல்வதும் வழமையாகியுள்ளது. இதற்கான தீர்வினை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் காலதாமதம் எடுப்பது ஏன் என்பதுதான் மிகவும் மர்மமாகவுள்ளது.
3. நிர்வாக முறைமை
வைத்தியசாலையில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் தவறினை தீர்க்காமல் அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமோ அல்லது அமைச்சு செயலகங்களிலோ அறிவாக்கமால் அதனை மறைக்க முற்படுவது மிகச் சிறந்த நிர்வாக முறைமை அல்ல.
4. EMS தனியார் வைத்தியாசாலைகளின் தலையிடுகளா?
மட்டக்களப்பில் அதிக முதலீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட வைத்தியாசாலை அமைக்கபட்டுள்ளது. இதில் பல்வேறுபட்ட வைதத்திய நிபுணர்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள் என அறசல்புறசலாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அத்துடன் போதனா வைத்தியாலைக்கு வரும் நோயாளிகள் கூட வைத்தியர்களின் பரிந்துரையின் படி இக்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.
எப்போது மருத்துவம் மற்றும் கல்வி அரசிடம் இருந்து தனியார் மயமாகின்றதோ அப்போதே மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகவே மாறும் என்பது திண்ணம்.
இன்றும் எமது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல உயிர்கள் காப்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் குறைகளை களைந்து கொள்வது மிகவும் அத்தியாவசியமானது.

No comments:
Post a Comment