மட்டக்களப்பு என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருகின்ற இடங்களில் மிக முக்கியமான இடமாக 1913 இல் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமாகும். ஆனால் அதனை விட காலத்தால் முந்திய கலங்கரை விளக்கமானது மட்டக்களப்பின் மொட்டைக் கோரியில் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்பு.
இம் மொட்டைக்கோரி கலங்கரை விளக்கமானது மட்டக்களப்பின் பாலமீன்மடு பிரதேசத்தின் வடக்காக 500 மீற்றர் தூரத்தில் அமைக்கபட்டிருந்தது (அதாவது நல்லதண்ணி மடு மற்றும் மாஸ்டர் தாண்ட மடுவிற்கு அருகில் ) . இக் கலங்கரை விளக்க கட்டுமானமானது செங்கற்களை வைத்து சுண்ணாம்பு நீற்றினுடன் தேன் மற்றும் சக்கரையினை கலந்து அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கலங்கரை விளக்கத்தின் நடுவே இரும்பால் ஆன புதையிர கடவை போன்ற இரும்பு பட்டம் காணப்படுகின்றது. அதன் உச்சியிலேயே ஒளி விளக்குகள் வைக்கப்பட்டு கடற்பயணங்களுக்கும் மீன்பிடிக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டிலிருந்து கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இம் மொட்டைக்கோரி கலங்கரை விளக்கத்தின் உதவியுடன் இறக்குமதி செய்யப்பட்டதோடு ஏற்றுமதி வாணிபமும் நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக தமிழ்நாட்டின் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அம்பாறை மாவட்டம் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி பொருட்களாக ஓடு, சீமேந்து, வெங்காயம், பஞ்சு போன்றவையும் ஏற்றுமதிப் பொருட்களாக வாசனைப் திரவியங்களும் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு பயன்படுத்தபட்டு வந்த கலங்கரை விளக்கமானது கடற்கோள், இயற்கை மாற்றங்களினால் மண் வார்க்கப்பட்டு கழிமுகமானது தற்போது காணப்படும் இடத்திற்கு இயற்கையாகவே மாற்றமடைந்தன் காரணமாக இதன் பாவனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என அறியக்கூடியதாக இருகின்றது.
இவ்வாறு எமது மட்டக்களப்பின் வரலாற்றினை பறைசாற்றுகின்ற வரலாற்று சின்னமானது தற்போது அழிவுகின்ற நிலையில் காணப்படுகின்றது. ஊர்மக்கள் சிலர் மொட்டைக்கோரியி கலங்கரை விளக்கத்தினை பாதுகாக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை கவலைக்குரிய விடயமாகும்.
தமிழ்நாட்டுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த மொட்டைக்கோரி
Reviewed by Viththiyakaran
on
7:48 AM
Rating:
No comments:
Post a Comment