ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தில், போர்த்துக்கீசரால் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த கோட்டையை புனரமைத்து பாரிய கோட்டை ஒன்றை மட்டக்களப்பு வாவி அருகே ஏற்படுத்தினர். இக் கோட்டைக்குரிய வளங்களை விநியோகிப்பதற்கும், ஏனைய வாணிப நடவடிக்கைகளுக்கும் கடல்வழி மார்க்கமே முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருந்த அக்காலத்தில் , கோட்டையை அண்டிய ஆழமான கடல் நீர் ஏரியே சகல ஏற்றுமதி , இறக்குமதி நடவடிக்கைகளுக்கும் முக்கிய இறங்குதுறையாக இருந்தது. இது தற்போது சுங்க வீதி என அழைக்கப்படும் வீதியில் மட்டக்களப்பு நூலகத்துக்கு எதிரே அமைந்திருந்தது. மேலும் ஐரோப்பியர் வருகையின் முன்பிருந்தே இது பண்டைய இறங்கு துறையாகப் பாவிக்கப்பட்டதற்குரிய எச்சங்கள் இப்பகுதில் இன்றும் காணப்படுகின்றன. எனவே இந்த பண்டைய இறங்குதுறையை ஞாபகப்படுத்தும் நோக்குடனும், அதனைப் பிரதிபலிப்பதற்குமே அவ்விடத்தில் மட்டக்களப்பு வாயில் ( Batticaloa Gate) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் யாதேனில் இதில் இரண்டு விதமான கருங்கற்கள் பதிக்கப்பட்டு நவீன முறையில் அழகிய கலப்பான விதமாகும். இதன் முன்பகுதி திறந்த தலைவாசலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன, இரண்டு பக்கமும் இரண்டு சிறிய வாசல்களைப் கொண்ட தாழ்வராங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உச்சப் பகுதி ஒல்லாந்தரினால் பாவிக்கப்பட்ட பண்டைய விளக்குகளைப் பிரதிபலிக்கும் மாதிரி விளக்குகளினாலும், பண்டைய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலசங்களினாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதன. வெளிச்சுவர் இளமஞ்சள் நிற கருங்கற்களாலும், தூண்கள் கறுப்பி நிற கருங்கற்களாலும் பதிக்கப்பட்டு அழகாகாவும் சீராகவும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதான தலைவாசலின் வலர்பக்கச் சுவரில் முதலாவதாக புறாவின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசத்தின் முக்கிய தேவையான சமாதானத்தை நினைவுபடுத்துற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நாட்டில் சமாதான நிலவுமானால் அங்கு வாழும் இனங்களுக்கிடையே அன்னியோன்யமும், சகோரத்துவமும் நிலவுவதுடன் எல்லா இனங்களும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஐக்கியமாக வாழவர்.
இதைக் குறிப்பதற்காகவே இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகிய நான்கு இனத்தவர் ஐக்கியத்தை எடுத்துகாட்டுவதற்காகவும் மற்றும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய நான்கு சமயத்தவரது ஐக்கியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் நான்கு கைகள் கோரத்திருக்கும் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெண்கள் விருந்தினர்களை ஆரத்து எடுத்து வரவேற்பதாகவும் மலர் தூவி வரவேற்பதாகவும் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டக்களப்புக்கு வெளியிலிருந்து வருகை தரும் விருந்தினர்களை மனமகிழ்வுடன் வரவேற்று உபசரிக்கும் மட்டக்களப்பு மக்களின் இயல்பான பண்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தலைவாசலின் இடதுபக்கச் சுவரில் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார, களியாட்ட கலையம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் மட்டக்ககளப்பு நாட்டுக்கூத்தில் அணியப்படும் கீரிடம் மற்றும் வாத்தியங்களான பறைமேளம், சல்லாரி, உடுமக்கு, மகரயாழ், சிலம்பு, சொர்ணாலி ஆகிய வாத்தியங்களின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தலைவாசலின் வடக்கு,தெற்கு சுவர்களில் தானியங்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலான வேளாண்மைச் செய்கையை பிரதிபலிக்கும் வகையில் அசைந்தாடும் நெற்கதிர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
வலது பக்கத்திலுள்ள சிறிய வாசலைக் கொண்ட தாழ்வாரத்தின் வடபுறச் சுவரில் பண்டைக்காலத்தில் மட்டக்களப்பின் சிற்றரசர்களாயிருந்த மேகனாதனினதும், உலகநாச்சியினதும் உருவங்கள் வரையப்பட்டுள்ளதுடன் தென்புறச் சுவரில் இலங்கையை ஆண்ட போர்த்துக்கீசர், ஓல்லாந்தர். ஆங்கிலேயர் ஆகியோரின் அன்றைய ஆடைகளுடனான உருவங்களும் வரையப்பட்டுள்ளன. அத்துடன் அன்று அவர்களால் பயன்படுத்தப்பட்ட பாய்மரக்கப்பலின் சாயலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இடது பக்கத்திலுள்ள சிறிய வாசலைக் கொண்ட தாழ்வாரத்தின் மேற்குப்பக்கத்தில் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வுகளான மட்டக்களப்பு நாட்டுக் கூத்தில் அணியப்படும் கீரீடமும் மற்றும் காவடி ஆட்டம், வசந்தன் கூத்து ,கும்மி, மத்தளம் என்பவற்றின் கோலங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மேற்பகுதியில் சந்திரவட்டக்கல்லின் தோற்றம் வரையப்பட்டுள்ளது.
தலைவாசலின் உள்பகுதி மேல் சுவரில் இயற்கையுடன் உயிரினங்களும் இணைந்த ஒரு கலப்பான ஓவியம் வரைப்பட்டுள்ளது. இயற்கையின் பல்லினச் சேர்க்கையை விளக்குவதற்காக இந்த கற்பனை ஒப்பனைகள் கலந்த நவீன ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அடுத்ததாக வெளிப்புறச் சுவரின் இருபக்கங்களிலும் மட்டக்களப்பு வாவியில் பாடப்படுவதாக நம்பப்படும் நீர் மகளிரின் உருவங்களை வெளிகாட்டுவதாக கருங்ககல்லீனுடே அந்த உருங்கள் வரையப்பட்டுள்ளன.
தலைவாசலின் வடக்கு,தெற்கு சுவர்களில் தானியங்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலான வேளாண்மைச் செய்கையை பிரதிபலிக்கும் வகையில் அசைந்தாடும் நெற்கதிர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
வலது பக்கத்திலுள்ள சிறிய வாசலைக் கொண்ட தாழ்வாரத்தின் வடபுறச் சுவரில் பண்டைக்காலத்தில் மட்டக்களப்பின் சிற்றரசர்களாயிருந்த மேகனாதனினதும், உலகநாச்சியினதும் உருவங்கள் வரையப்பட்டுள்ளதுடன் தென்புறச் சுவரில் இலங்கையை ஆண்ட போர்த்துக்கீசர், ஓல்லாந்தர். ஆங்கிலேயர் ஆகியோரின் அன்றைய ஆடைகளுடனான உருவங்களும் வரையப்பட்டுள்ளன. அத்துடன் அன்று அவர்களால் பயன்படுத்தப்பட்ட பாய்மரக்கப்பலின் சாயலும் பொறிக்கப்பட்டுள்ளது.
தலைவாசலின் உள்பகுதி மேல் சுவரில் இயற்கையுடன் உயிரினங்களும் இணைந்த ஒரு கலப்பான ஓவியம் வரைப்பட்டுள்ளது. இயற்கையின் பல்லினச் சேர்க்கையை விளக்குவதற்காக இந்த கற்பனை ஒப்பனைகள் கலந்த நவீன ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அடுத்ததாக வெளிப்புறச் சுவரின் இருபக்கங்களிலும் மட்டக்களப்பு வாவியில் பாடப்படுவதாக நம்பப்படும் நீர் மகளிரின் உருவங்களை வெளிகாட்டுவதாக கருங்ககல்லீனுடே அந்த உருங்கள் வரையப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாயில் புதினம் தெரியுமா ? ( Batticaloa Gate)
Reviewed by Viththiyakaran
on
11:57 PM
Rating:
No comments:
Post a Comment