இலங்கையை அழகுபடுத்துவோம் எனும் தொனிப்பொருளிலும் மட்டக்களப்பில் ஏற்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலினால் பாதிப்புற்ற சுற்றுலாத்துறையினை மீட்டேடுக்கும் நோக்கத்துடனும் எமது மட்டக்களப்பு இளைஞர்கள் மட்டு நகரில் உள்ள சுவர்களில் மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை கலாச்சார ஓவியங்களையும் இலங்கைத் தீவுவினை அடையாளப்படுத்துகின்ற ஓவியங்களையும் வரைந்து வருகின்றனர்.
இவ் ஓவியங்கள் மட்டக்களப்பு இளைஞர்களின் முயற்சியினால் வரைப்படுவதுடன் எமது பிரதேசத்தில் இலைமறை காய்களாக உள்ள ஓவிய கலைஞர்களுக்கான களத்தினையும் ஏற்படுத்தி அவர்களது திறமையினை உலகறியச் செய்ய அடித்தளமிட்டுக் கொடுக்கின்றது.
மேலும் தற்போது வடகீழ் பருவக்காற்று காலநிலை காரணமாக ஏற்படும் மழையினையும் பொருட்படுத்தாது இரவும் பகலுமாக தங்களது நோக்கத்தினை அடைவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இம் முயற்சியானது மாபெரும் வெற்றியாக மாறுவதற்கு அனைவரினது ஆதரவினையும் வேண்டிக் கொள்கின்றனர்.
மட்டக்களப்பு இளைஞர்களின் முயற்சியில் வர்ணமயமாகும் மட்டுநகர்
Reviewed by Viththiyakaran
on
10:43 AM
Rating:
No comments:
Post a Comment