கார்த்திகை விளக்கீட்டினை கொண்டுவதற்கு காரணம் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
இக் கார்த்திகை வீளக்கீட்டினுடன் மட்டக்களப்பில் மாவிழிவாணன் பழக்கவழக்க முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதாவது சிறுவர்களுக்கான செயற்பாட்டு கதையாக கூறப்பட்டு வந்துள்ளது.இதன்படி கார்த்தினை வீளக்கீட்டிற்கு முதல் நாள் இனிப்பு பலகாரங்கள் , திண்பண்டங்கள் செய்யப்படும் அடுத்த நாள் காலையில் இறைவனைக்கு படைத்து உண்பர். இதற்கிடையில் அதிகாலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டுச் சிறுவர்கள் நித்திரையிலிருந்து எழும்ப முதல் மாவினை குலைத்து கை அடையாளங்களை தங்களது வீட்டு சுவரில் பதிப்பார்கள்.
சிறுவர்கள நித்திரையிலிருந்து எழும்பியதும் யார் இந்ந அடையாளங்களை இட்டது ? யார் வந்தார்கள் என கேக்கும் போது பெரியவர்கள் மாவிழிவாணன் உங்களை பார்க்க வந்தார் ஆனால் நித்திரையில் இருந்ததால் வந்தற்கு அடையாளமாக கை அடையாளங்களை கதவில் பதித்து விட்டுச் சென்றார் என கூறுவர்.ஆனால் இவ்வாறான கதை செயற்பாடுகள் நடைமுறையில் மருவிட்டது என்றே கூறவேண்டும்.
மறந்து போன மாவிழிவாணன் பழக்கவழக்க முறை
Reviewed by Viththiyakaran
on
1:33 PM
Rating:
No comments:
Post a Comment