2006 மாவிலாற்றில் ஆரம்பித்த இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான யுத்தல் இறுதியாக 2009 வைகாசி (மே) மாதம் 18ம் திகதி இலங்கை இராணுவத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.இப் போராட்டத்தின் போது பல லட்சக்கணக்கான எம் மக்கள் கொல்லப்பட்டனர் அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதியாக்கப்பட்டனர்.இந் நாளில் உயிர் நீத்தவர்களுக்காக இறைவனைப் பிராத்திப்பது மற்றும் நினைவு கூற வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமைப்பாடாகும்.
18.05.2018 உடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்ற போதும் எம் மக்களுக்கு கிடைத்தது என்ன?
ஐக்கிய நாடுகள் சபை
Channel 4 மூலம் இலங்கையின் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதியுத்ததின் போது சர்வதேச யுத்த போர் விதிமுறைகள் நிரூபணமாக்கப்பட்டன அத்துடன் 'வெள்ளைக் கொடி விவகாரம் பற்றியும் போர் விதிமுறைகள் மீறப்பட்டதனையும் ' பற்றி ஊடகங்களில் முன்னாள் இராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவும் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் இவ்வாறான போதிய ஆதாரங்கள் காணப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்துமே ஓர் மந்த கதியில் காணப்படுகின்றனது.குறிப்பாக வருடாக வருடம் கூட்டங்களை மேற்கொள்கின்றனறே தவிர தவறுசெய்தர்களுக்கோ எவ்விதமான தண்டனையும் கிடைக்கவில்லை.அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நியாயமும் கிடைக்கவில்லை.
தமிழ் அரசியல் கட்சிகள்
முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற இன அழிப்பிற்காக குறித்த நாளில் மாத்திரம் நினைவு கூறும் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக தங்களது அரசியல் கோட்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களிடையே வாக்குகளை துண்டாடிக் கொண்டிகின்றனறே தவிர முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற இன அழிப்பிற்காக முடிவு கொண்டுவரப்படவில்லை.அத்துடன் எவ்விடயத்திலும் ஒற்றுமையின்றி துண்டுபட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போதை நாட்டு நடப்பிலிருந்து தெரியவருகின்றது.
தற்போது இலங்கை நாட்டின் எதிர் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காணப்படுகின்ற போதிலும் அரசியல் பாவைகளாகவே கருதப்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்தில் பூர்த்தி செய்வோம் என கூறிக் கொண்டே தங்களது காலத்தை கழித்துக் கொள்ளுவர் போலும்.
முன்னாள் போராளிகள்
முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு நல்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்வர்களில் அரைவாசிப் பகுதியினர் மீண்டு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீதம் உள்ள அரைவாசியில் கால் பங்கினர் மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக ஒரு செய்தி அல்லது வதந்தி காணப்பட்டு வருகின்றது மற்றைய கால் பங்கினர் அரசியல் கைதிகள் என முத்திரை குத்தப்பட்டு என்ன குற்றம் செய்தோம் என தெரியாமல் சிறையில் வாடுகின்றனர்.
முன்னாள் போராளிகள் எமது சமூகத்தில் கொண்டிருக்கினறனர் ஆனால் அவர்களுக்கு வாழ்வதற்கு தேவையான எவ்வகையான அடிப்படை வசதிகளும் இற்றை வரைக்கும் இலங்கை அரசினால் பரவலாக வழங்கப்படவில்லை அத்துடன் அவர்களுக்கு என எவ்விதமான அரங்சாங்க தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படவில்லை.
அரசியல் கைதிகளுக்கு உதாரணமாக ஆனந்தசுதாகரனைக் குறிப்பிடலாம்.இவரை விடுதலை செய்வதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எதும் பயனலிக்கவில்லை என்பது எமது கண்களினுடாக கண்டவை.
இலங்கை அரசாங்கம்
'முள்ளிவாய்க்கால்' தொடர்பான நினைவு தினங்களை மேற்கொள்ளும் போது மீண்டும் ஓர் போர் சூழல் ஆரம்பித்துவிடுமோ என்கின்ற எண்ணத்திலும் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்படும் விதிமுறைகளையோ அல்லது பொறிமுறைகளையே எவ்வாறு தவிர்த்துக் கொள்வது அத்துடன் நல்லாட்சி என்ற பெயரில் எவ்வாறு ஆட்சிக்காலத்தை கடத்துவது என்கின்ற நோக்கில் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருகின்றது.
ஆக மொத்ததில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலைமை மிக கவலைக்கிடமே.
புல்லும் முளைத்த "முள்ளிவாய்க்கால்"
Reviewed by Viththiyakaran
on
11:40 PM
Rating:

No comments:
Post a Comment