சமீபகாலமாக எமது மட்டக்களப்பு பிரதேசத்தில் துரிதமாக வளர்ந்து வருகின்ற ஓர் ஆட்கொல்லி நோயாக நுண்கடன்கள் காணப்பட்டு வருகின்றது. இந் நுண்கடன்கள் தனிமனிதனை தற்கொலை செய்ய துண்டுவது மட்டுமல்லாமல் மறைமுகமாக எமது சமூகத்தில் காணப்படும் திறமைமிக்க இளைஞர்களை குறுகியதோர் வட்டத்தினுள் கட்டுப்படுத்தி அவ் இளைஞர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் மட்டுபடுத்திக் கொள்ள வைக்கின்றது.
நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் யார்
இந் நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் அதிகமாக கிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய (இந்தோனசியா,யப்பான் போன்ற) வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். இந் நிறுவனங்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அனர்த்த உதவிகள் போன்றவற்றில் மக்கள் ஸ்திரமான நிலைக்கு வரவேண்டும் என்கின்ற நோக்கத்தில் நுண்கடன்களை மக்களுக்கு வழங்குகின்றது.
நுண்கடன்களை பெறுபர்கள் யார்
நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் மக்கள் வேறுயாரும் அல்ல அன்றைக்கு உழைத்து அன்றைக்கு சாப்பிடும் சாதாரண கூலித்தொழில் செய்பவர்களே ஆவர்.
நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்களின் கண்கட்டுவித்தை
மக்களின் நலன் பேணுகின்றோம் எனக் கூறிக் கொண்டு நுண்கடன்களை சிறிய விதிமுறைகள் மூலம் இலகுவாக மக்களை அவர்களது மாய வலையில் வீழ்த்திக் கொள்கின்றனர்.
உதாரணமாக 50000 ரூபாய் கடன் பெறுவதற்கு ஒரு தேசிய அடையாள அட்டை போட்டோ பிரதி போதும் அத்துடன் இக் கடனை வாரா வாராம் சிறிய தொகையினை செலுத்துவதன் மூலம் கடனை அடைத்துவிடலாம். அதன் பிறகு இறுதியாக வாங்கிய தொகைக்கு அதிகமாக பெறுலாம் என்கின்ற ஆசை வார்த்தைகளை கூறுவர். இவ்வாறு ஆசை வார்த்தைகளை கூறி தங்களது சுய லாபத்தினை மாத்திரம் அதிகரித்துக் கொள்கின்றனவே தவிர மக்கள் நலன் பேணவில்லை இந் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.
மார்க்கத்தினை ஏமாற்றி வாங்கும் வட்டிகள்
சில நுண்கடன் நிறுவனங்களின் பூர்வீகம் இஸ்லாமிய நாடுகளாகவும் அந் நிறுவனங்களின் உயர்பதவிகள் வகிப்பவர்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவராக காணப்படுகின்ற போதிலும் நுண்கடன் வழங்கி வட்டி வசூலிக்கின்றனர். வட்டி என்பது இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்டது (ஹராம்). ஆனால் சில வகையாக யுக்திகள் மூலம் ஹராம் அல்ல என்கின்ற வகையில் தங்களது லாபத்திற்காக கடன்களை வழங்கி வட்டியினை அறவிட்டுக் கொள்கின்றனர்.
எமது பிரதேச இளைஞர்களின் திறமைகளை எவ்வாறு கட்டுபடுத்துகின்றது
எமது பிரதேசத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மூவின மக்களும் வாழ்கின்றனர்.இதில் முஸ்லிம் இளைஞர்கள் எப்போதும் இவ் வகையான நுண்கடன் வழங்கின்ற நிறுவனங்களில் அதிகமாக பணி புரிவதில்லை அவ்வாறுதான் பணி புரிந்தாலும் உயர் பதவிகளில் மாத்திரமே பணிபுரிவர். இதற்கு காரணம் வட்டி இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்டது. அத்துடன் அவர்கள் தங்களது திறமையினை மாதம் 10000 தொடக்கம் 20000 வருமானம் வருகின்ற இத் தொழிலில் வெளிக்காட்டாமல் அதனை விட உயர் சம்பளம் கிடைக்கின்ற சொந்நமான வியாபாரங்களை தொடங்கி அதில் தங்களது திறமையினை வெளிக்காட்டி அதிக வருமானம் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் ஏனையவர்கள் மாதா மாதாம் குறிப்பிட்ட சம்பளம் கிடைக்கும் நேர்த்தியாக உடையணிந்து செல்லலாம், குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும், சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும் என்கின்ற கற்பனையில் தங்களிடம் காணப்படும் திறமைகளை வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளாமல் மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியுபர்களின் திறமைகள் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரியாமல் போகின்றது..
நுண்கடன் நிறுவனங்களில் பணிபுரிபவருக்கு சமூத்தில் எப்போதும் நற்பெயர் காணப்படுவதில்லை காரணம் கொடுத்த கடனிற்கான வட்டியினை வாங்குவதற்கு வருகின்ற போது அவ் ஊழியரை ' லோன்காரான்' வாரான் என்றே அதிகமாக அழைக்கின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் நோக்கம் தவறானதாகவும் அமைகின்றது.அதாவது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகமாக பெண்களே கடன்களைப் பெறுகின்றனர்.இதன் மூலம் பெண்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக கிடைக்கின்றன.இதனால் சில சந்தர்ப்பங்களில் பெண்களை மிரட்டி அவர்களை வற்புறுத்தி தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என ஒரு சில இளைஞர்களின் எண்ணங்கள் காணப்படுகின்றன.
நுண்கடன் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அரசியல்
கடந்த சில வாரங்களிற்கு முன்னால் நுண்கடனினை செலுத்த முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். அப் இறந்தது அவரது குடும்பத்திற்கு அதிக இழப்பாகும். இதனை சாதமாக பாவிப்பவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டங்களை மேற்கொண்டனர் ஆனால் அவர்களது செயற்பாட்டின் மூலம் எதிர்பார்த்த இலக்கு நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை இல்லாதோழிப்பது ஆனால் அவ்விலக்கினை அடைந்தார்களா என்பது தெரியவில்லை எனவே இவ்வாறான அரசியல்வாதிகளே ஒர் முடிவினை எடுத்தால் அதன் இலக்கினை அடையும் வரை போராடுங்கள் மாறாக முதலை கண்ணீர் வடிக்காதீர்கள்
ஆக மொத்தில் நுண்கடன் எமது சமூகத்தினை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை மாறாக எமது மக்களை கடனற்ற நின்மதியாக வாழ்க்கையினை தயவு செய்து வாழவிடுங்கள் அத்துடன் மக்களளே நீங்களும் விழித்துக்கொள்ளுங்கள்
நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் யார்
இந் நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் அதிகமாக கிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய (இந்தோனசியா,யப்பான் போன்ற) வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். இந் நிறுவனங்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அனர்த்த உதவிகள் போன்றவற்றில் மக்கள் ஸ்திரமான நிலைக்கு வரவேண்டும் என்கின்ற நோக்கத்தில் நுண்கடன்களை மக்களுக்கு வழங்குகின்றது.
நுண்கடன்களை பெறுபர்கள் யார்
நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் மக்கள் வேறுயாரும் அல்ல அன்றைக்கு உழைத்து அன்றைக்கு சாப்பிடும் சாதாரண கூலித்தொழில் செய்பவர்களே ஆவர்.
நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்களின் கண்கட்டுவித்தை
மக்களின் நலன் பேணுகின்றோம் எனக் கூறிக் கொண்டு நுண்கடன்களை சிறிய விதிமுறைகள் மூலம் இலகுவாக மக்களை அவர்களது மாய வலையில் வீழ்த்திக் கொள்கின்றனர்.
உதாரணமாக 50000 ரூபாய் கடன் பெறுவதற்கு ஒரு தேசிய அடையாள அட்டை போட்டோ பிரதி போதும் அத்துடன் இக் கடனை வாரா வாராம் சிறிய தொகையினை செலுத்துவதன் மூலம் கடனை அடைத்துவிடலாம். அதன் பிறகு இறுதியாக வாங்கிய தொகைக்கு அதிகமாக பெறுலாம் என்கின்ற ஆசை வார்த்தைகளை கூறுவர். இவ்வாறு ஆசை வார்த்தைகளை கூறி தங்களது சுய லாபத்தினை மாத்திரம் அதிகரித்துக் கொள்கின்றனவே தவிர மக்கள் நலன் பேணவில்லை இந் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.
மார்க்கத்தினை ஏமாற்றி வாங்கும் வட்டிகள்
சில நுண்கடன் நிறுவனங்களின் பூர்வீகம் இஸ்லாமிய நாடுகளாகவும் அந் நிறுவனங்களின் உயர்பதவிகள் வகிப்பவர்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவராக காணப்படுகின்ற போதிலும் நுண்கடன் வழங்கி வட்டி வசூலிக்கின்றனர். வட்டி என்பது இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்டது (ஹராம்). ஆனால் சில வகையாக யுக்திகள் மூலம் ஹராம் அல்ல என்கின்ற வகையில் தங்களது லாபத்திற்காக கடன்களை வழங்கி வட்டியினை அறவிட்டுக் கொள்கின்றனர்.
எமது பிரதேச இளைஞர்களின் திறமைகளை எவ்வாறு கட்டுபடுத்துகின்றது

ஆனால் ஏனையவர்கள் மாதா மாதாம் குறிப்பிட்ட சம்பளம் கிடைக்கும் நேர்த்தியாக உடையணிந்து செல்லலாம், குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும், சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும் என்கின்ற கற்பனையில் தங்களிடம் காணப்படும் திறமைகளை வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளாமல் மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியுபர்களின் திறமைகள் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரியாமல் போகின்றது..
நுண்கடன் நிறுவனங்களில் பணிபுரிபவருக்கு சமூத்தில் எப்போதும் நற்பெயர் காணப்படுவதில்லை காரணம் கொடுத்த கடனிற்கான வட்டியினை வாங்குவதற்கு வருகின்ற போது அவ் ஊழியரை ' லோன்காரான்' வாரான் என்றே அதிகமாக அழைக்கின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் நோக்கம் தவறானதாகவும் அமைகின்றது.அதாவது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகமாக பெண்களே கடன்களைப் பெறுகின்றனர்.இதன் மூலம் பெண்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக கிடைக்கின்றன.இதனால் சில சந்தர்ப்பங்களில் பெண்களை மிரட்டி அவர்களை வற்புறுத்தி தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என ஒரு சில இளைஞர்களின் எண்ணங்கள் காணப்படுகின்றன.
நுண்கடன் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அரசியல்
கடந்த சில வாரங்களிற்கு முன்னால் நுண்கடனினை செலுத்த முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். அப் இறந்தது அவரது குடும்பத்திற்கு அதிக இழப்பாகும். இதனை சாதமாக பாவிப்பவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டங்களை மேற்கொண்டனர் ஆனால் அவர்களது செயற்பாட்டின் மூலம் எதிர்பார்த்த இலக்கு நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை இல்லாதோழிப்பது ஆனால் அவ்விலக்கினை அடைந்தார்களா என்பது தெரியவில்லை எனவே இவ்வாறான அரசியல்வாதிகளே ஒர் முடிவினை எடுத்தால் அதன் இலக்கினை அடையும் வரை போராடுங்கள் மாறாக முதலை கண்ணீர் வடிக்காதீர்கள்
ஆக மொத்தில் நுண்கடன் எமது சமூகத்தினை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை மாறாக எமது மக்களை கடனற்ற நின்மதியாக வாழ்க்கையினை தயவு செய்து வாழவிடுங்கள் அத்துடன் மக்களளே நீங்களும் விழித்துக்கொள்ளுங்கள்
மட்டக்களப்பில் திறமையினைக் ஆட்கொல்லும் புதிய வகை நோய் கண்டுபிடிப்பு !
Reviewed by Viththiyakaran
on
10:23 AM
Rating:

No comments:
Post a Comment