குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயம், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை பறவைகள் சரணாலயமாகும். இங்கு Australian White Ibis போன்ற வலசைப் பறவைகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக வருகை தருகின்றன. அவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றன.
இந்த பறவைகள் சரணாலயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு சேர்க்கிறது. ஆனால், சிலர் இரவு வேளைகளில் குளத்தில் கழிவுகளை கொட்டுவதாலும், பறவைகளை வேட்டையாடுவதாலும், இப்பகுதி மாசுபட்டு, பறவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இந்த பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் பறவைகள் மற்றும் சுற்றுப்புறத்தின் நிலைப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால், இந்த அழகிய பறவைகள் சரணாலயம் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment