ஆயிரம் அதிசயங்கள் மறைந்துள்ள "ஆயிரம் விழுது ஆலமரம்"

ஆயிரம் கால் ஆலமரம்’ (ஆயிரம் விழுது ஆலமரம்) என்றழைக்கப்படும் பெரும் ஆலம் விருட்சம் ஒன்று காணப்படுகின்றது. இந்த ஆலமரம் பலநூறு வருடங்கள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக விழுதுகள் நிலத்தில் படிந்து அவை விருத்தி பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆலமரத்தின் கீழே நாக வழிபாடு, வைரவர் வழிபாடு என்பன நீண்ட காலமாக நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் பொருட்டு பெரும் தொகையான மக்கள் அங்கு வெள்ளிக் கிழமைகளில் கூடுகின்றனர். பக்தியோடு வழிபாடு இயற்றுபவர்களுக்கு வைரவர் அருள் பாலிக்கின்றார். இந்த ஆல மரத்தின் கிழக்கே சிறு சிறு பறைகளைக் கொண்ட பிரதேசம் ஒன்று காணப்படுகின்றது. இந்த பகுதி ஏறத்தாழ 500 மீற்றர் அகலமும் 1000 மீற்றர் நீளமும் கொண்டது. புராதன குடியிருப்பு தளம் என்பதனை பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கு காணப்படும் பாறைகளில் பிராமிச் சாசனங்கள் (கல்வெட்டுகள்) காணப்படுகின்றன.


ஆயிரம் அதிசயங்கள் மறைந்துள்ள "ஆயிரம் விழுது ஆலமரம்" ஆயிரம் அதிசயங்கள் மறைந்துள்ள "ஆயிரம் விழுது ஆலமரம்" Reviewed by Viththiyakaran on 8:48 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.