வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை
குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே
தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது..!
இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும்,
சாயமேற்றப் பட்டிருக்கும். .!
#ருத்ராட்ஷத்தின் - மகிமை! #ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.
அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
#யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
*சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.*
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.
#சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது).,
#பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330)
பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
#எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான்
அணிந்திருக்கின்றனர்.
அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.
*ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.*
#ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.
சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.
ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.
*நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.*
#நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு,
கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.
நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். ..
இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது....
#ருத்ராட்ஷத்தில் எத்தனை முகம் ?
#யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.
எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.
பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து.
ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.
ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
ஒன்றிலிருந்து பதினான்கு முகங்கள் உடைய ருத்திராக்க்ஷங்களும் கிடைக்கின்றன ....
ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம்
***********************************
இதை அடைவது மிக கஸ்டமாகும் .இது பகவான் சங்கரனின் திருப்பிறப்பாக இது கருதப்படுகிரது இதை ஒரு பாா்வை பாா்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும் , உங்களது பாவங்களை எல்லலாம் நீங்கள் இழப்பிா்கள் இதை அணிந்தால் ,சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து மோச்சத்திருக்கான வழியை காணுவாா்.
இரண்டு முகங்கள்
********************
இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை கூடுதலாக இருக்கும் இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாாிஸ்வரா் ஸ்வரூபமாகும் இதன் கிரகம் சந்திரன் இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும் ,கொடும் பாவமான ,பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும் இதை அணிபவா்கள் செல்வம் ,சந்தோசம் ,மன அமைதி,மனதை ஒருமுகப்படுத்துதல் ,குண்டலினியை (பாம்பு சக்தி) எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவாா்கள்,
மூன்று முகங்கள்:,
*******************
மூன்று முகம் கொண்ட மணிகளும்"அாிதானது சாதாரணமாகக் கிடைப்பதில்லை ,இதுவும் விலை கூடுதலானதே இது "சோம சூரிய அக்கினி" எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன்,சந்திரன், அக்கினிதேவன் முவருமே இதற்கு அதிபதிகள் இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பஹு ஹத்தி
தோஷம் கூட விலகும் ,பலவகை பாவங்கள் எாிந்து சாம்பலாகும் ,மேலும் இதனை அணிந்தவன் அண்மீகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான் சிவன் மகில்வாா் அக்கினி தேவன் அருள் தருவாா்.
நான்கு முகங்கள்:
*******************
இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்ப்படுகிறது .இதை அணிந்தால் பக்தி ,செல்வம்,மகிழ்ச்சி,மோஷம்,ஆகியவற்றைப் பெறலாம் . இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிராசிக்கிறது போின்பத்தை அடையலாம்.இதன் கிரகம புதன் இதனை அனைத்த்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம்
கல்வி , கலைதிறன்,நுண்கலைகள் வளா்ச்சிபெறும்
ஐந்து முகம் கொண்ட மணிகள்
**********************************
சாதாரணமாக கிடைப்பவை, விலை குறைவானவை இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் "உடையது அகோரம், தத்புருஸ்ம்,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்க்கு அதிதேவதைகள்.இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும் . பலவகை பாவங்கள் நசிந்து,சிவசாரூபம் கிகை்கும் உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும்.
ஆறுமுகம் :
************
ஆறுமுகம் கொண்டமணிகள் அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை.இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை ஆணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும் பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பாாிசுத்தமும் வாய்க்கும்.
ஏழு முகம்:
***********
ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அாிதானவை பிரம்மதேவன் கட்டளையினால்,கீழேழ உலகங்களை அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,ரசாதலம்,மஹாதலம்,எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலை னாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைதாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை இ்வகை மணிகளை .அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் .
பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும் . கல்வி,நுன்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும்.சிலா் சப்தமாதா்களும் சப்த்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள்.
எட்டு முகம்:
************
எட்டு முகம் கொண்ட மணிகளும் அாிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி,வரத கணபதி,சிந்தாமணி கணபதி,மயூரேச கணபதி,சத்தி கணபதி ,மஹா கணபதி,என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை.
இதன் கிரகம் ராகு.இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும்.குருவை கொண்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமாசித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காாியத் தகைள் அகலும் கங்கை தேிவி மகிழ்ந்து அருள் புாிவாள்.
ஒன்பது முகம்:
***************
ஒன்பது முகம் கொண் மணிகள் கூட அவ்வளவாக கிடைப்பதில்லை கைலை மலையின் எண்திசைகளிலும்காவல் புாியும் தேவதைகளான அசிதாங்க பைரா்,ருருபைரவா்,சண்டபைரவா்,குரோதபைரவா்,உன்மத்தபைரவா்,கபாலபைரவா்,சம்ஹரபைரவா்,என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது மகம் கொண் ருத்திராக்க்ஷமணிகள் இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி ,நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்க்டில் அணிக.
பத்து முகம்:
*************
பத்து முகம் கொண்ட மணிகள் அாிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய,
கூா்ம,,நிசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஸ்ண,கல்கி,அதாரங்களின் நாயகனான விஷ்னு ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத,பிரேத,பைசா,பிரம்மராக்ஷசா்களால் ஏற்ப்படும் ஆபத்துகள் விலகும் ஏவல் பில்லி சுணியங்கள் வலுவிழந்து போகும்,பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப் படுவீா்கள் . மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும்
பதிணோரு முகம்,
******************
பதிணோரு முகம் கொண்ட மணிகளும் அபூா்மானவை எளிதில் கிகை்காதவை இவ்வகை மனிகள் ,மஹாதேவன்,அரன்,ருத்திரன்,சங்கரன்,நீலோஹிதன்,ஈசானன்,கபாலி,சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால்,பலவகை உயிாினங்கள் ,பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்துவிதமான யாகங்களையும்,விரதங்கள் பூஜை பண்ணியம் வரும் ,சிவஞானம் சித்திக்கும்
*****************************************************************
#நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட இருபத்தேழ நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய
ருத்ராட்சம்.....!
1,அஸ்வினி = 9_2_3 முகம்
2,பரணி = 6 முகம்
3,காா்த்திகை = 1_3_11_12 முகம்
4,ரோகிணி - 2_3 முகம்
5,மிருகசீாிடம் = 3 முகம்
6,திருவாதிரை = 8_5_11 முகம்
7,புணா்பூசம் = 5 முகம்
8,பூசம் = 7 முகம்
9,ஆயில்யம் = 4 முகம்
10,மகம் = 9_2_3 முகம்
11,பூரம் = 6 முகம்
12,உத்திரம் = 1_3_11_12 முகம்
13,ஹஸ்தம் = 2_3 முகம்
14,சித்திரை = 3 முகம்
15,சுவாதி = 8_5_11 முகம்
16,விசாகம் = 5 முகம்
17,அனுஷம் = 7 முகம்
18,கேட்டை= 4 முகம்
19,மூலம் = 9_2_3 முகம்
20,பூராடம் = 6 முகம்
21,உத்திராடம் = 1_3_11_12 முகம்
22,திருவோணம் = 2_3 முகம்
23,அவிட்டம் = 3 முகம்
24,சதயம் = 8_5_11 முகம்
25,பூரட்டாதி = 5 முகம்
26,உத்திரட்டாதி = 7 முகம்
27,ரேவதி = 4 முகம்
********************************
#ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் ?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது.
ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 4 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
#ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...
அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.
இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.
மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.
ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே...!!!
**********************
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?
ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.
ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது....
அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து
அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...!
ஓம் நமசிவயநமஓம்....
ஷிவஷம்போ....
நன்றி
முழுமையாகப் படித்துவிட்டு அர்த்தமுடன் அணியுங்கள்...
Reviewed by Viththiyakaran
on
6:23 AM
Rating:
No comments:
Post a Comment