34வருடங்களின் பின் நிறுவிய இலுப்பையடிப்பிள்ளையாரைப் பார்க்க சாரிசாரியாகப் படையெடுக்கும் தமிழ்மக்கள்!


34வருடங்களின் பின் தானிருந்த இடத்தில் மீளவும் அமர்ந்த இலுப்பையடிப்பிள்ளையாரைப் பார்க்க தமிழ்மக்கள் சாரிசாரியாகப் படையெடுத்து வருகின்றனர்.
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராமத்தில் பல்லாண்டுகாலமாகவிருந்த அந்தப் பிள்ளையார் மீள அமர்த்தப்பட்டிருப்பதைக்காணவே இச்சனக்கூட்டம் தினமும் படையெடுக்கின்றனர்.1984ஆம் ஆண்டுவரை அந்த இலுப்பை மரத்தின்கீழிந்து அருளாட்சிசெய்த பிள்ளையார் அங்கிருந்த 60ஆம் கட்டை மக்கள் இடம்பெயர்ந்தவுடன் அவரும் வெளியேறினார்.
தற்போது அந்த மக்கள் மீண்டும் குடியமர்வதற்கான தொடர்போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது மீண்டும் வந்து அதே இடத்தில் அமர்ந்துகொண்டுள்ளார்.பொத்துவில் தமிழ் இளைஞர்களும் கனகர்கிராம மக்களும் இணைந்து தற்சமயம் அடர்ந்தகாடாகியிருக்கும் ஆனால் அவர் முன்பிருந்த அதே இலுப்பைமரத்தடியில் பொங்கல் படைத்து அதேபிள்ளையாரை மீளஅமர்த்தியுள்ளனர்.இந்த இடத்தைச்சுற்றி மக்களின் பாழடைந்த குடிமனைகள் மலசலகூடங்கள் இருப்பதை இன்றும் காணக்கூடியதாயுள்ளது.

34வருடங்களின் பின் நிறுவிய இலுப்பையடிப்பிள்ளையாரைப் பார்க்க சாரிசாரியாகப் படையெடுக்கும் தமிழ்மக்கள்! 34வருடங்களின் பின் நிறுவிய இலுப்பையடிப்பிள்ளையாரைப் பார்க்க சாரிசாரியாகப் படையெடுக்கும் தமிழ்மக்கள்! Reviewed by Viththiyakaran on 8:52 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.