1999 யில் ஆரம்பிக்கப்பட்ட எமது மட்டக்களப்பு அரும்பொருட் காட்சியம் எங்கே என்பது கேள்விக்குரிய விடயமாகவும் அதனைப் பற்றிய விடயங்களை ஆராயும் போது நகைப்புக்குள்ளாகின்ற விடயமாகவும் தற்போது காணப்படுகின்றது.
இந் நூதனசாலையானது மட்டக்களப்புச் செயலகம் அதாவது போர்த்துக்கேய கோட்டையின் ஒரு கட்டத்தில் அமைப்பட்டிருந்தது. இந் நூதனசாலையில் வைத்திய குறிப்புக்கள் அடங்கிய ஏடுகள், புராண ஏடுகள் உதாரணமாக அரிச்சந்திரன் புராணம், மட்டக்களப்பு மான்மியம் பழைய உபகரணங்கள் போன்ற மற்றும் பல வகையான மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு வகையாக சான்றுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் எமது மாவட்டத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட அரும்பொருட் காட்சியகம் என்பது சிறப்புமிக்க விடயமாகும்.
ஆனால் இன்று இந்த அருகாட்சியம் பற்றி தகவல்களை அறியலாம் என சென்றிருந்த போது எமக்கு கிடைத்த பதில் ' யாரோ உங்களிடம் பொய் சொல்லிருக்கின்றார்கள் அப்படி ஒன்றும்மில்லை இங்கு ' இதனைப் பற்றி மேலும் விசாரித்த போது கிடைத்த விடயம் எமது மட்டக்களப்பு செயலகத்தினை திராய்மடு பிரதேசத்திற்கு மாற்றிவிட்டு மட்டக்களப்பு கோட்டையினை முழுவதுமாக அருங்காட்சியமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருகின்றதாம் என்று
சிறப்பான திட்டம் ஆனால் இதில் பல்வேறு வகையான சந்தேகங்களும் கேள்விகளும் எழும்புகின்றன.
- காட்சிப்படுத்தப்பட்ட அருட்காட்சியகப் பொருட்கள் எங்கே ?
- அப்பொருட்கள் இருக்குமாயின் ஏன் காட்சிப்படுத்த முடியாமல் உள்ளது ?
- மட்டக்களப்பினை பறைசாற்றும் அருட்காட்சியகப் பொருட்கள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளதாக அல்லது வேறு எங்கும் கடத்தப்பட்டுவிட்டதா ?
- ஒரு அறையிலிருந்த அருட்காட்சியகப் பொருட்களை பாதுகாக்க முடியாது எனின் எப்படி வருங்காலத்தில் பிரம்மாண்டமாக கோட்டையில் அமைக்கப்படும் அருட்காட்சியகத்தினை பாதுகாப்பார்கள்?
அருங்காட்சியத்தில் வைக்கபட்டிருந்த புராதணப் பொருட்களின் புகைப்படங்கள் கீழே
காணாமல் ஆக்கப்பட்டோரின் வரிசையில் மட்டக்களப்பு நூதனசாலையும்
Reviewed by Viththiyakaran
on
12:59 PM
Rating:
No comments:
Post a Comment