இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது கல்வியா ? செல்வமா ? வீரமா?

8வது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி 16 நவம்பர் 2019 சனிக்கிழமை என  அறிவிக்கப்பட முன்னமே   பொதுஜன பேரமுனையும் ஜே.வி.பி யும்  தமது வேட்பாளர்களாக முறையே கோத்தபாய ராஜபக்ச அவர்களையும் மற்றும் அனுரா குமார திஸாநாயக்க  அவர்களையும் அறிவித்திருந்த தருணத்தில் ஐக்கிய தேசிய  கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணிலா அல்லது அமைச்சர் சஜித்தா என்ற   நீண்ட இழுபறிக்கு பின்    அக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை  அறிவித்துள்ளது.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தபாய ராஜபக்ச (வீரம்)



Image result for கோத்தபாய ராஜபக்ச"


வருகின்ற  நவம்பர் 16 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபயா ராஜபக்சவை   பொறுத்தவரையில்  அரசியலுக்கு அவர் முற்றிலும் ஒரு புதிய  முகமாகும். மேலும் அவர் இத்தேர்தலில் களமிறக்கப்பட முன்பு எந்த ஒரு அரசியல் பதவிகளையும் வகிக்கவில்லை  என்பதும் யாவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். 


அதி உயர் அரசியலை பொறுத்த வரையில் ஜனநாயகத்தை மதித்து மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும்  மேலும் அத்  திட்டங்கள் மற்றும்  சட்டங்களை   உரிய முறையில் அமூல் படுத்தப்படுத்துவதன் மூலமே  ஒரு சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த முடியும்.    மக்கள் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் வியூகங்களையும் விருப்பு வெறுப்புகளையும்   செவிசாய்க்கும் தன்மையின் மூலம் தான் ஒரு சிறந்த மக்கள் ஆட்சியை உருவாக்க  முடியும்  .  மேலும் இத் தன்மையை ஒரு இராணுவ மற்றும் போர் காலத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த ஒரு உயர் அதிகாரியிடம்  எந்த அளவிற்கு எதிர்பார்க்கமுடியும் என்பது தெரியாத ஒரு விடயமாகவும் உள்ளது.

மேலும் கோட்டபாய ராஜபக்சவை பொறுத்த அளவில் தமது  சிறு பராயத்தில்  இராணுவத்தில் சேர்ந்து  போர்  உக்கிரமான நிலையை அடைந்த  சூழலிலேயே  இவர் இச் சேவையில் இருந்து ஓய்வையும் பெற்றார். பின்னர் 1992 இல்  அமெரிக்காவிற்கு சென்று குடியேறிய  அவரது குடும்பம்  2004 ஆம் ஆண்டு வரையேயான  12 வருட காலமும்    அங்கே வாழ்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவின் குடி உரிமையையையும் பெற்றார்கள் . இக் காரணத்தால்  இவருடைய அரசியல் எதிராளிகள் இவரை ஒரு சந்தர்ப்பவாதி எனவும் குறை கூறுகின்றனர். பின்னர் தனது சகோதரர் மஹிந்தா 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவர் இலங்கைக்கு மீண்டும் வந்து குடியேறியது  மட்டுமல்லாது 2005 ஆம் ஆண்டில் இருந்து   பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து   விடுதலை புலிகளுக்கு எதிரான போரை மிகவும்   உக்கிரமாக முறையில் நடாத்தி 2009ஆம் ஆண்டு அப் போரை முடிவிற்கும் கொண்டுவந்தார். மேலும் இவர் பாதுகாப்பு செயலாளராக  2015ஆம் ஆண்டு  வரையும்  தொடர்ந்தார்.  இவருடைய பதவிக்காலத்தில் பரவலாக காணாமல் போக்கடிக்கப்பட்டமை, பல ஊடகவியலாளர்களின் படு கொலை, ஊடவியலாளர்கள் காணாமல் போக்கடிக்கப்பட்டமை, அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் என பரவலாக மேற்கொள்ளப்பட்டதால்  இவருடைய பதவிக்காலம் ஜனநாயகத்தின் இருண்ட  காலம் எனவும் கருதப்படுகின்றது.

மேலும் இவர் பாதுகாப்பு செயலாளராக இருந்து போரை முடிவிற்கு கொண்டு வந்த வேளையில் பாரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென்றும் இவற்றுள் பல சம்பவங்கள் உலக போர் விதிகளை மீறிய சம்பவங்களாக உள்ளன எனவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிக்கான அமைப்புகள் தெரிவித்து வருவதோடு மேலும் இவருக்கு எதிராக போர் குற்ற விசாரணையையும் சர்வதேச ரீதியில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியும் வருகின்றனர் . மேலும் இவர் நாட்டின்  ஜனாதிபதியானால்  இவரது ஆட்சி ஒரு இராணுவ சாயல் உடைய ஆட்சியாகவே இருக்கும் எனவும் கருதப்படுகின்றது .

இவருடைய கட்சியும் மற்றும் இவரும் முழு சிங்கள அடிப்படைவாதிகளான ஹேல  உரிமய, சிங்கள அடிப்படைவாத அரசியல் தலைவர்களான விமல் வீர வம்ச, உதய கம்பில , கிராமப்புறத்தில்  வாழும் சிங்களமக்கள், பாதுகாப்பு படைகளோடு தொடர்புடையவர்கள், அவர்களது குடும்பங்கள், சிறுபான்மை சமூகங்களை பொறுத்தவரையில் மாற்று அரசியலில் உள்ள அரசியல் தலைவர்களான டக்ளஸ், கருனா, பிள்ளையான், அதாவுல்லா. ஹிஸ்புல்லாஹ், ஆறுமுகம் தொண்டமான் போன்றோறை பெருமளவில் நம்பியே இவரது தேர்தல் வெற்றியும்  அமைந்துள்ளது .

அமைச்சர் சஜித் பிரேமதாச  (செல்வமான கட்சி)



Image result for அமைச்சர் சஜித் பிரேமதாச"


அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில் அரசியலில் மாவட்ட அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் என படிப்படியாக பல நிலைகளை அடைந்து  இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலையையும் அடைந்துள்ளார்.    இவருடைய தந்தை முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்கே பிரேமதாசவும் இவரைப்போல்  மாநகரசபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என அரசியலில் படிப்படியாக வளர்ந்து நாட்டின்   மிக உயர்ந்த பதவியானா ஜனாதிபதி பதவியை  1989இல் அடைந்தவராவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் அமைச்சர் சஜித் இன்  தந்தையையாரும் அக்காலப்பகுதியில்  ஜனாதிபதியாக இருந்த  JR ஜெயவர்தனவுடனான  நீண்ட இழுபறிக்கு பின்னர்   ஜனாதிபதி வேட்ப்பாளராக களமிறக்கப்பட்டார் . அதேபோல் இன்றும் J.R. ஜெயவர்த்தனாவின் மருமகனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனான மிக நீண்ட இழுபறிக்குப் பின் தான் முன்னாள் ஜனாதிபதி R பிரேமதாசாவின் மகனான அமைச்சர் சஜித்தும்   ஐக்கிய தேசிய கட்சியால் ஜனாதிபதி வேட்ப்பாளராக இன்று களமிறக்கப்பட்டுள்ளார் . 

இது வரை  இவர் பங்கு கொண்ட நான்கு பொதுகூட்டம்களும், களுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற பொது கூட்டம்  அடங்கலாக மக்கள் வெள்ளம் நிறைந்த கூட்டம்களாகவே அமைந்துள்ளன. மேலும் இவர் தன்னுடைய தந்தையைப்போல் மிகவும் எளிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்ற்றத்திற்காக இரவு பகலாக உழைக்கும் ஒரு இளம் அரசியல் வாதி எனவும் கருதப்படுகின்றார். ஒரு எளிமையான ஆடம்பரமற்ற முறையில்  தனது பணியை ஆற்றிவருவதோடு  மட்டுமல்லாது அரசியல் வாதிகள் முறையான விதத்தில் அரச வளங்களை  பயன்படுத்தவேண்டும் என்பதிலும் இன்றுவரையும்  உறுதியாக உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்ப்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில் அவருக்கு ஜனாதிபதி மைத்திரியின் மறைமுக ஆதரவு தற்போது வரை உள்ளதாக கருதப்படுவதோடு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள பங்காளி கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ், அமைச்சர் ரிஸாட்டின் மக்கள் காங்கிரஸ், அமைச்சர் மனோ, திகாம்பரம், ராதாகிருஷ்ணனின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, அமைச்சர் சம்பிக்க ரணவக்காவின்  ஹெல உரிமய  ஆகிய  கட்சிகளின் ஆதரவும் இவருக்கு இருப்பதாகவும் கருதப்படுகின்றது. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை மேற்கொள்ளாத இவ் வேளையிலும் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதரவும் இவருக்கு உள்ளதாகவும் ஆரம்பக்கட்ட நிலைமைகள் தென்படுத்துகின்றன. 

ஜே.வி.பி யின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க ( கல்வியாளர்களின் கட்சி )

Image result for ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க"

இத் தேர்தலில்  மூன்றாவது முன்னணி போட்டியாளராக ஜே.வி.பி யின் தலைவைர் அனுரா குமார திஸாநாயக்காவும்   களமிறங்கியுள்ளார்.  அனுராதபுரம் மாவட்டத்தில்  தப்புத்தகம எனும் இடத்தில்  1968யில் பிறந்த இவர் தனது பாடசாலை நாட்களிலிலேயே கட்சியின் அங்கத்தவராக இணைந்து பல்வேறு பதவிகளை வகுத்து 2000ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டில் இருந்து  ஜேவிபி யின் தலைமைப்பதவியையும் பொறுப்பேற்றுள்ளார் . அரசியலில் இதுவரை வகுத்த உயர் பதவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசில்  2004 - 2005 வரையேயான காலப்பகுதியில் விவசாய  அபிவிருத்தி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பாராளுமன்றத்தில் தேசியபட்டியலின் ஊடாக பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்ற இவர்  பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியுமாவர்.

ஜே.வி.பி ஐ பொறுத்தவரையில் அண்மைய காலமாக மக்கள் மனதில் பல்வேறு காரணங்களுக்காக நல்லதொரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் அரசியல் கட்சியாகவும் தோற்றம் அளித்து வருகின்றது. குறிப்பாக முன்னனி அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும்  ஊழல் மோசடிகள்இ மற்றும் செய்திறன் அற்ற தன்மையும் அதே வேளை ஜே.வி.பி யினரின் நேர்மையான அரசியலும் இக் கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கச்  செய்துள்ளது.

ஜே.வி.பி கட்சியின் தலைமையும்  மேலும் அக் கட்சியில் உள்ள ஏனைய முன்னனி அரசியல் தலைவர்களும் நாட்டில் அநியாயம்கள் நடைபெறும் போதெல்லாம் தட்டி கேட்பதும்   குறிப்பாக 26 அக்டோபர் 18யில் ஜனாதிபதி  மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆட்சி மாற்ற முயற்சியை முறியடிப்பதற்கு எடுத்த முயற்சி போன்ற நிகழ்வுகளில் ஜே.வி.பி எடுத்த மிக உறுதியான முடிவுகளினால்  இக் கட்சிக்கு  குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்ட மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கு அதிகரித்து  
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது கல்வியா ? செல்வமா ? வீரமா? இலங்கை  ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது கல்வியா ? செல்வமா ? வீரமா? Reviewed by Viththiyakaran on 9:00 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.