தூசு துணிக்கையால் ஆபத்துக்குள்ளாகும் இலங்கை



இந்தியாவின் தலை நகர் புதுடெல்லியில் ஏற்பட்ட வளிமண்ட  மாசடைவானது அபாயகர அளவினை தொட்டுவிட்டதால்  பல்வேறுபட்ட பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன. அதனால் வாகனப்போக்குவரத்து சீர்துலைந்ததுடன் குறிப்பாக மக்களுக்கு சுவாசிப்பது தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது.இம் வளிமண்டல மாசடைவானது இந்தியாவுடன் மட்டும் நின்று விடாமல் எமது இலங்கை திருநாட்டிற்கும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. 


இதன் போது National Building Research Organisation (NBRO) மூத்த விஞ்ஞானி சரத் பிரேமசிறி கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் ஏற்பட்ட வளிமண்டல மாசடைவினால் தாக்கத்தின் காரணமாகவே கொழும்பு நகரமானது குறித்த சில நாட்களுக்கு முன்னிருந்து புகை மண்டலமாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Disaster Management Centre அறிவிக்கையில்  கொழும்பில் வளிமண்ட மாசு அதிகரித்துள்ளது இதன் மூலமாக உடலுக்கு தீங்குகள் ஏற்பட வாய்ப்புக்ள உண்டு ஆகவே மக்களை அவதானமாக செய்படுமாறு கூறியதுடன் குறிப்பாக ஆஸ்துமா நோய்கள் தகுந்த முன்னேச்சிரிக்கைகளுடன் அவதானமாக இருக்குமாறு அறிவித்துள்ளது.

மேலும் ஒரு தரவு மூலமாக இம் மாசு துணிக்கைகளை சுவாசிப்பதனால் நூறு சிகரட் புகையினை சுவாசிப்பதனால் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் என அறியக் கூடியதாகவுள்ளது. ஆகவே இலங்கை மக்கள் வளி மண்டலமாசடைவினை ஆரம்ப புள்ளியாக பார்க்கமால் முற்றுப்புள்ளியாக மாற்ற வேண்டும் காரணம் இம் வளி மண்டல மாசடைவானது எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பது மறுக்கு முடியாத நிதர்சனமான உண்மை..

தூசு துணிக்கையால் ஆபத்துக்குள்ளாகும் இலங்கை தூசு துணிக்கையால் ஆபத்துக்குள்ளாகும் இலங்கை Reviewed by Viththiyakaran on 9:22 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.