மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறுபட்ட விடயங்களில் சிறப்புமிக்கதாக விளங்குவது போல பெண்கள் விலைபோகும் விடயத்திலும் முதன்மையிடத்தையே தக்கவைத்துள்ளது.இதனை 08.11.2019 கடந்த ஆயித்தியமலை பதினான்கு வயது சிறுமி துஸ்பிரயாகத்திற்கு உட்படுத்தப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டமை அத்துடன் பதினொரு விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்களில் இருந்து புலனாகின்றது.
இன்று எதிர்பாராத விதமாக எமது குழுவினருக்கு விலைமாதர் ஒருவரினை நேர்காணல் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து. எந் நேர்காணலின் மூலமாக கிடைக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு
உங்களைப் பற்றி
எனது பெயர் _______________ நான்______________ பிரதேசத்தில் வசித்து வருகின்றேன் எனது வயது தற்போது 38 ஆகின்றது. எனக்கு முதல் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட மன விரக்கியால் அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு சில வருடங்களின் பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் ஆனாலும் அந்த வாழ்க்கையும் இனிதானதாக அமையவில்லை. காரணம் இரண்டாவதாக திருமணம் செய்தவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு சண்டை போடுகின்றார்.
ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கையோக நான்கு ஆகியது . இதில் இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்கள் தற்போது தரம் 11 , தரம் 8 , தரம் 6 மற்றும் தரம் 5 இல் கல்வி கற்கின்றனர்.
ஏன் இத் தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள்
நானாக இத் தொழிலை தேர்ந்தெடுக்கவில்லை வறுமையின் காரணமாகவே இத்தொழிலில் உள்தள்ளப்பட்டேன். எனது வறுமை நிலையை பார்த்து எனது நண்பி ஒருவர் உனது குடும்பத்தில் நான்கு பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றார். உன் குடிகார புருசன் எப்போதும் உழைத்து தரமாட்டான் இந்த தொழிலில் குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி வியாபார விபச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டேன்.
வறுமை என கூறுகின்றீர்கள் அரசாங்கத்தின் உதவிகள் எதும் கிடைக்கவில்லையா
சமூர்த்தி திட்டத்தின் மூலம் மாதாந்தம் 3000 ரூபா கிடைக்கின்றது ஆனால் அதனை வைத்துக் கொண்டு பிள்ளைகளின் கல்வி , அன்றாட வாழ்வினை கொண்டு செல்வது என்பது சாத்தியமற்றது.
உங்களைப் போன்று மட்டக்களப்பில் வேறு பெண்கள் விபச்சாரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்களா?
ஆம் அவர்களும் வறுமையின் காரணமாகவே இத் தொழிலில் உட்படுத்தப்படுகின்றனர்.
மட்டக்களப்பில் எங்கு எங்கு விபச்சாரம் நடைபெறுகின்றது என கூற முடியுமா ?
அதிகமாக ஹோட்டகளில் நடைபெறுகின்றது. இதற்கு மேலதிகமாக என்னால் கூற முடியாது
உங்களுக்கு வழங்கப்படும் விலையானது வாழ்வினை கொண்டு நாடாத்துவதற்கு போதுமானதாக உள்ளதா ?
ஆம் ஒரு மணி நேரத்தில் இரண்டாயிரம் முதல் நான்காயிரம் வரை பெற்றுக் கொள்ள முடியும் இவ்வாறு தொழிலிற்கு ஒவ்வொரு நாளும் செல்லுவதில்லை பணத் தேவை அதிகரிக்கும் போதே செல்லுவேன்
இறுதியாக நீங்கள் வேறு வேலைகளுக்குச் செல்ல முயற்சி செய்வில்லையா?
வறுமையின் காரணமாக வீட்டு வேலை , சமையல் வேலை என பல்வேறு வேலைகளுக்குச் சென்றேன் ஆனால் அங்கு எனது குடும்ப சூழ்றநிலையினை அறிந்து கொண்டு என்னை பல தடவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர் அத்துடன் தொலைபேசிக்கு அழைத்து ஆபாசமாக பேசி பலவாறு என்னை கொடுமைப்படுத்துள்ளனர் அங்கு இருக்கும் முதலாளிமார்.
மட்டக்களப்பு பற்றுள்ள கனவான்களே , புத்திவீஜீகளே, அரசியல்வாதிகளே எமது சமூகப் பெண்கள் வறுமையின் காரணமாக விபச்சாரம் செய்து பிழைப்பினை நடத்தி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மேலும் மேலும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை காரணம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்வதனால் ஆகும். அத்துடன் இவ்வாறு தொடர்ந்து செல்வது எமது சமூகத்தில் சீர்கெட்டினை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எமது மட்டக்களப்பு கலாச்சாரத்தினை தூக்கு கையிற்றில் ஏற்றுகின்றது. ஆகவே எமது சமூகப் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட நேரடியாக இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு உங்களது ஆதரவினை தெரிவித்து அவர்களும் வாழ்வாரத்தில் முன்னேற உதவிகளை செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
குறிப்பு : பாதுகாப்பின் காரணமாக சில தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
வறுமையால் விபச்சாரம் - நேர்காணல்
Reviewed by Viththiyakaran
on
8:45 PM
Rating:
No comments:
Post a Comment