நாம் குழந்தைகளாக இருக்கும் போது எம்மை நீ என்னவாக வரப்போகின்றாய் என கேட்கும் போது நான் என்ஜினியராக,விஞ்ஞானியாக அல்லது டாக்டர் ஆக வரபோகின்றேன் என கூறுவோம். ஆனால் காலப்போக்கில் அக் கனவுகள் காணமால் போய் இறுதியாக ஒரு அரச உத்தியோகம் அல்லது சம்பளம் கூடிய வேலை கிடைத்தால் போதும் என வாழ்க்கையினை முடித்துக் கொள்கின்றோம்.ஆனால் இவ்வாறான எமது கனவுகள் காணாமல் போவற்குரிய காரணங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை.ஆனால் இவற்றுக்கான ஒரு சில பேராசியர்கள் கருத்தின் படி பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு
- வழிகாட்டுதல் இன்மை
- பெற்றோர் தலையீடு
- வறுமை
- அரசியல் செல்வாக்கு
- குழந்தையின் ஆற்றலை கண்டுபிடிக்காமை
மேற்குறித்த பிரச்சினைகளை தகர்த்தெறியும் முகமாக எமது மட்டக்களப்பில் அமைக்கபட்ட சமூக தொழில் முனைவு நிறுவனம் தான் Dreamspace Academy.
Dreamspace Academy யில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் அவ்வாற்றல் தொடர்பான மேலதிக பயற்சிகள் வழங்கி அடுத்தகட்ட நகர்வாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சிகளைப் பெற்றுக் கொடுகின்றனர் இவ் நிறுவனத்தினர்.
இந் நிறுவனத்தில் மொழி தொடர்பான பயிற்சிகள், இசைக்கருவிகள் தொடர்பான பயிற்சிகள், கணிணி தொடர்பான பயிற்சிகள், வியாபாரம் ஆரம்பிப்பது தொடர்பான பயிற்சிகள், புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சிகள் , Makerspace பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சி நெறிகளுக்கு முழுமையான புலமைப் பரிசுகள், பிரச்சினை ரீதியான கற்றல் கற்பித்தில் செயற்பாடு, வெளிநாட்டவர்கள் மூலமான பயிற்சிகள் போன்றன வழங்கப்படுகின்றன. அத்துடன் இங்கு 50000ற்கு மேற்பட்ட புத்தகங்களை உடைய நூலகம் அமைக்கட்டுள்ளது மிக விசேடமான விடயமாகும். இங்கு மாணவர்கள் அல்லாவர்களும் உறுப்பினர் ஆவதன் மூலமாக இங்கு காணப்படுகின்ற சகல உபகரணங்களையும் பயன்படுத்தி பயன் பெற்றுக் கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு - 065 222 65 25
நீங்களும் Village விஞ்ஞானி ஆகலாம்
Reviewed by Viththiyakaran
on
2:55 PM
Rating:
No comments:
Post a Comment