மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 28 கிலோமீற்றருக்கு வடக்காக கல்குடா கும்புறுதுமுலை பிரதேசத்தில் கண்ணியமான அதிகாரமளித்தல் மற்றும் நிலையான அபிவிருத்தி என்கின்ற தொனிப்பொருளில் அமையப் பெற்றதே Merrill J. Fernando அறக்கட்டளையாகும். இவ்வறக்கட்டளை நிருவனமானது ஒரு பில்லியன் செலவில் கிழக்கு மாகாண மக்களின் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க கூடியதாக Merrill J. Fernando இனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அறக்கட்டளை நிலையமானது 23 ஏக்கர் நிலப் பரப்பில் அமையப் பெற்றிருப்பதுடன் கிழக்கு மாகாண மக்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுகின்றது. அவையாவன
- சிறுவர்கள்
இலைமறை காய்களாக மறைந்து வாழ்கின்ற திறமை மற்றும் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாடசாலையின் பின்பு கல்வி , தொழிற் பயிற்சிகளை வழங்குதல்
- சமையல் மற்றும் விருந்தோபல் பாடசாலை
இவ்விடம் பாசிகுடாக்கு அருகில் காணப்படுவதால் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் சமையல் மற்றும் விருந்தோபல் பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறுபட்ட உணவு புத்தாக்கங்களை மேற்கொள்ள Merrill J. Fernando அறக்கட்டளை வழியமைத்து கொடுத்தல்
- பெண்கள் மேம்பாட்டு திட்டம்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக சமையல், வீட்டுத்தோட்டம், தையல், அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்தல்.
- விவசாய ஆராய்ச்சிகள்
இத் திட்டத்தின் மூலமாக பல்வேறுபட்ட விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு விவசாயத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தல்.
- வானவில் மையம்
இம் மையமானது விசேட தேவையுள்ளோருக்காக அமைக்கப்பட்டதாகும். இதன் மூலமாக விசேட தேவையுள்ளோரும் சாதாரணமானவர்கள் போல கல்வி, விளையாட்டு மற்றும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
இவ் அறக்கட்டளை நிருவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் அனைத்தும் இலவசமானதாகும். மேலும் இங்கு பயிற்சி பெறுகின்றவர்களுக்கு தங்குமிட வசதி , உணவு வசதிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சி முடிவின் போது பெறுதியான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள Merrill J. Fernando அறக்கட்டளை
Reviewed by Viththiyakaran
on
10:08 PM
Rating:
No comments:
Post a Comment