ஈஸ்டர் தின தாக்குதலின் பின்பு இலங்கையின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டு சோதனைகள் நடை பெற்று வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அச் சோதனைச் சாவடிகள் பயங்கர வாதத்திற்கு அடித்தளமாக காணப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்படாமல் கண்துடைப்பாக இராணுவ பயிற்சி நிலையங்களுக்கு அருகில் அமைக்கபட்டிருக்கின்றன.
மேலும் எமது மட்டக்கப்பு பிரதேசத்தில் 5ம் கட்டை ( மண்முனைச் சந்தி ) , கல்லடி ( சரவணா வீதி ) இராணுவ சோதனைச் சாவடிகள் காணப்படுகின்றன.ஆனால் பல்வேறு வகையாக குறைபாடுகள் காணப்படுகின்றன அவை பின்வருமாறு
1.பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளல்
வீதியினால் பயணித்துக் கொண்டிருகின்ற பெண்களை நிறுத்தி விசாரணை செய்வது போல அவர்களிடம் பேசிக் கொண்டு அப் பெண்களிடம் தங்களது பெயர், தொலைபேசி எண்களை அவர்களைது பைகளில் இடுதல் மற்றும் சோதனை என்கின்ற பெயரில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்வையிடல்.
2.இரவு நேரத்தில் பெண்களை சோதனைக்குட்படுத்தல்
இரவு நேரத்தில் பிரயாணம் செய்கின்ற பெண்களை சோதனை செய்ய பெண் இராணுவத்தினர் இன்மையினால் ஆண் இராணுவத்தினரே சோதனைகளை மேற்கொள்கின்றனர். இது எவ்வாறு எமது இலங்கை சமூகத்திற்கு பொருத்தமானது ? ( பெண் இராணுவத்தினர் பகலில் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்கின்றனர் இரவு நேரத்தில் அவர்களது முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் என்ன பாராபட்சம் )
இறுதியாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டியது பிரச்சினைக்குரிய பிரதேசங்களிளேயே தவிர வேறு பிரதேசங்களில் அல்ல. இதில் ஒரு விடயத்தினை குறிப்பிட வேண்டியுள்ளது. தற்கொலை குண்டு வெடிக்கப்பட்ட கொழும்பு விடுதிகளுக்கு அருகில் இராணுவ சோதனைகளும் சோதனைச் சாவடிகளும் பிற இடங்களைத் தவிர குறைவாகவே காணப்படுகின்றது. இது தான் இலங்கை அரசினது பாதுகாப்பு நிலைமை.
பெண்களை கண்டிராத இலங்கைப் பாதுகாப்பு படையினர்
Reviewed by Viththiyakaran
on
11:27 AM
Rating:
No comments:
Post a Comment