ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்பு மக்களிடம் காணப்படும் கேள்விகள்

கடந்த மாதம் சித்திரை 21ம் திகதி பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் 300 மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இம் மிலேச்சதமான தாக்குதலினை சர்வதேச பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு என கூறிக் கொள்ளும்  ISIS எனும் பயங்காரவாதக் அமைப்பினர் உரிமைக் கொண்டமை அனைவரும் அறிந்ததே.


இத் தாக்குதலின் பின்பு இலங்கை மக்கள் ஒவ்வொருவரிடனும் பல்வேறு வகையான ஐயப்பாடுகள் காணப்படுகின்றன. அதில் சிலவற்றின் தொகுப்பே இப்பதிவாகும்.


1.ISIS ஊடுருவலினை அறியாத இலங்கை பாதுகாப்பு அமைப்புக்கள்,  பொலிஸ்,புலனாய்வுத் துறையினர்

வருடா வருடம்  வரவு செலவுத் திட்டத்தின் மூலம்  பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் பணம்  இலங்கை நாட்டின் பாதுகாப்பினையும் இறைமையும் பாதுகாப்பதற்காக செலவிடப்படும் போதும் கடந்த மூப்பது வருட யுத்த்தினை நிறைவு செய்த அனுபவமிக்க பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுகின்ற போதும் அதி நவீன பாதுகாப்பு கருவிகளை பாவனைக்குட்படுத்தப்படுகின்ற போதும் எவ்வாறு பயங்கரவாதிகள் எமது நாட்டினுள் ஊடுருவினர்?

இலங்கையின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள்  அத்துடன் மேலும் அவர்களுக்கு பின்புலனாக உதவி செய்தவற்கு என புலனாய்வு அதிகாரிகளும் காணப்படுகின்றனர். இவர்களது பிரதான சேவை சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதும் பிரதேசங்களில் ஏற்படும்  குற்றச் செயல்களை குறைப்பதுமேயாகும்.

ஆனால்  ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின் தான்  பொலிசார் , புலனாய்வுத் துறையினர் மற்றும் படையினர் தேடுதல் வேட்டையினை மேற்கொண்டு பல்வேறு வகையான  ஆயுதங்களை கைப்பற்றுகின்றனர். அதற்கு முன்னைய காலங்களில் பொலிஸாருக்கோ, புலனாய்த் துறையினருக்கோ மற்றும் படையினருக்கோ ஒரு சிறு சந்தேகமான சம்பங்களோ அல்லது புலனாய்வு அறிக்கைகளோ கிடைக்கவில்லையா?


2.மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள்

பிரதேச மக்களுக்கு சேவை செய்வற்காகவே மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பபடுகின்றனர். அதில் அரசியல் அனுபவம், அரசியல் சாணக்கியத்தின் மூலம்  மக்கள் பிரதிநிதிகளில் சிலர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் நாங்கள் மக்களுக்காக வாழ்கின்றோம் அவர்களுக்கு சேவை செய்கின்றோம் என பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லையே தத்தமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற சந்தேகத்துக்கிடமான விடயங்கள் பற்றி.  அதற்கிடையில் தங்களை தாங்களாகவே மண்ணின் மைந்தன் , ஊர்காப்பாளன் என பட்டப் பெயர்களை சூட்டிக் கொள்கின்றனர்.

வெடிப்பு சம்பங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகமாக வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கோடிக் கணக்கான பணம் இணைய வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை மூலமாக அறியக் கூடியதாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கியது யார் ?

உதாரணமாக  வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை சுங்கப் பிரிவினர் கட்டாயமாக பரிசோதனை செய்தே பின்பே உரியவருக்கு அனுப்பி வைக்கப்படும் . ஆனால் அவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லையா ? அல்லது எவரது செல்வாக்கு மூலமாக பரிசோதனை மேற்கொள்ப்படவில்லையா ?

இணையத்தில் பணப்பரிமாற்றம்  செய்வதனை அவதானிக்க கூடிய வசதி வாய்ப்புக்கள் இலங்கையில் இல்லையா ? ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சு காணப்படுகின்றது.



3.ஊர்மக்கள் 

தாக்குதின்  பின்பு பொலிசார், புலனாய்வுத் துறையினர் மற்றும் படையினர் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல்களை மேற்கொண்ட பின்புதான் பயங்கரவாதிகள் பற்றிய தகவல்கள் ஊர்மக்களினால் வெளியிடப்பட்டது.

ஆனால் பயங்காரவாதிகள் ஊர்மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு இலங்கையில் பல பாகங்களிலும் பயிற்சி முகாம்களை அமைத்துக் கொண்டு தங்களது பயங்கரவாத தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் அப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு ஊர் மகனுக்காவது சந்தேகம் வரவில்லையா ?  காரணம் பயங்காரவாதிகள் பயிற்சிகளின் போது சத்தங்களையோ அல்லது துப்பாக்கி சூட்டுக்களையே மேற்கொண்டிருப்பர் இதில் ஒரு சிறிய சத்தம் கூட ஊர்மக்களுக்கு கேட்கவில்லையா ? சந்தேகத்துக்குரிய வெளிநபர்கள் கூட  ஊரவர் கண்களுக்கு தென்படவில்லையா ?



4.ஆயுதங்கள் மீட்டேடுப்பு

நாடாளாவிய ரீதியில் பல்வேறு வகையான ஆயதங்கள் (வாள்,வெடிமருந்து,துப்பாக்கி, தோட்டாக்கள் )பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.இதில் வேடிக்கையாதேனில்  வாள் வைத்திருப்பதற்கான காரணம் பின்வருமாறு  அரசியல் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுப் பெண்களின் பாதுகாப்பிற்கு, காடுகளை சுத்தம் செய்வதற்கு, சமையலுக்கு  ஆகவே வாள்கள் மற்றும் கத்திகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஐனநாயக நாட்டில்  பெண்களுக்கு பாதுகாப்பில்லை  உறுதிப்படுத்தப்படுவதுடன் அவ்வாறு எதும் துஸ்பிரயோகம் நடைபெறும் போது வாள்  வெட்டுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்  ஆனால் இவ்வாறான வாள் வெட்டுப் பதிவுகள் பொலிஸ் நிலையங்களில் அதிகமாக காணப்படவில்லை.

அதனைத் தவிர ஒரு வீட்டில்  அல்லது பள்ளிவாசலில்  ஒரு அல்லது  இரு வாள்கள் காணப்படலாம்.ஆனால் கைப்பற்றபட்ட ஆயுதங்களோ பல. இவற்றினை பாதுகாப்புக்கு என கூறி மூடி மறைக்க எத்தணிப்பது போல் தோன்றுவதுடன்  அவை எதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும்?

5.ஊடகங்கள் மற்றும் செய்திப் பகிர்வுகளுக்கு தடை

எமது நாட்டில் பக்க சார்பின்றி  செய்திகளை வெளியிடுகின்ற ஊடங்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே காணப்படுகின்றன. ஏனையவை நாட்டு நிலைமை எப்போதும் சுமுகதாகவே காண்படுகின்றது மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நன்மையான விடயங்கள் பற்றியே செய்திகளை வெளியிடுகின்றனர்.

குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும் என்பது பழமொழி  அதற்கினங்க பக்கச்சார்பின்றி தொழிற்படும் ஊடங்கள் மீது  சில குற்றமுள்ள  விஷமிக  அவதூறு ஏற்படும் வகையில் செய்படுகின்றனர். அதன் மூலமாக அத் தாக்குதலுக்கும் அவர்களுக்கும் தொடர் இருக்கும் எனகின்ற கேள்வியினைத் தோற்றுவிக்கின்றது.

மேலும் அரசாங்கம் வெடிப்பு தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிடவேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. இது இலங்கை ஜனநாயக சோலிய குடியரின் ஜனநாயக அம்சமா ?
ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்பு மக்களிடம் காணப்படும் கேள்விகள் ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்பு  மக்களிடம் காணப்படும் கேள்விகள் Reviewed by Viththiyakaran on 9:04 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.