தற்போது மட்டக்களப்பில் தற்கொலைகள் அதிகமாக அதிகரித்து வருகின்றது. அந்ந வகையில் தற்கொலைகளுக்கான பிரதான காரணமாக இருப்பது நவீன தொழிநுட்ப சாதனங்கள் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இக் கருத்தில் பலர் ஆச்சரியப்படலாம். நவீன தொழிநுட்ப சாதனங்கள் மூலம் எப்படி தற்கொலை சாத்தியப்படும் என்று ஆம் கட்டாயம் இது சாத்தியப்படும்.
தற்போதைய கால கட்டத்தில் மூன்று வயது குழந்தை கூட தொலைபேசி, தொலைகாட்சி இல்லாமல் சாப்பிடுவதில்லை பெற்றோர் சொல் கேட்பதும் இல்லை ( இவ் நிழ்ச்சி குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறுகின்றது என்பதனை யாராலும் மறைக்க முடியாது மற்றும் மறுக்கு முடியாது) .அதில் தானாவே முயன்று தவறி கற்றுக் கொண்டாலும் அக்குழந்தை குறிப்பிட்ட ஒரு பருவத்தின் பின்பு ( குறிப்பாக கட்டிளைமைப் பருவத்தில் ) வக்கிரமான காணோளிகளையோ, புகைப்படங்களையோ, பதிவுகளையோ எப்படியாவது பார்ப்பதற்கு நவீன சாதானங்கள் வழி வகுக்கின்றன.இவ்வாறன வக்கிரமான பதிவுகள் மூலம் குறித்த ஒரு இளைஞன் அதனை நாமும் முயன்று பார்ப்போம் என எத்தணிக்கும் போது தான் பிரச்சினை உருவாகின்றது.
நாம் ஒரு தவறு செய்து விட்டோம் என்பதனை உணரும் ஒருவன் தான் எப்படி அதில் இருந்து தப்பிக்கலாம் என யோசிக்கும் போது அவனுக்கு இரு வழிகுறிகள் கிடைக்கின்றன. அவை
1.பிரச்சினையை சமாளிப்பது
சமாளிக்க கூடியவன் தான் அறிந்த கற்றுக் கொண்ட விடயங்கள் மூலமாக பிரச்சினையை முறியடித்து வாழ்வில் அன்றாடம் வெற்றியாளன் ஆகின்றோன்.
2.பிரச்சினையிலிருந்து தப்பிப்பது
தப்பிக்க நினைப்பவன் தற்கொலை செய்து அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று மறைந்து வாழ்ந்து அன்றாட தோல்வியாளன் ஆகின்றான்.
தற்போது விடயத்திற்கு வருவோம். கடந்த இரு தினங்களினுள் குறித்த ஒரு இளைஞன் கல்லடிப் பாலத்திலிருந்து பாய்து தற்கொலை செய்து கொண்டான். அவ்விளைஞன் தற்கொலை செய்தமைக்கான உண்மையான காரணம் அவ்விளைஞருக்கும் கடவுகளுக்கும் தான் இப்போதைக்கு தெரியும்.
குறித்த இளைஞன் பற்றி தவறான கருத்துக்களையும் மறையான எண்ணங்களை எற்படுத்தும் வகையிலான ஊர் தொடர்பான கதைகளையும் சமூவ வலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இரு சமூகங்களுக்கிடையே கிளர்ச்சியினையும் துண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர். இவ்வாறான விஷமிகளை எமது சமூகத்தில் விட்டுவைப்பது சமூக ஆரோக்கியமல்ல.
குறித்த சமூகப்பதிவில் ஒருசாரார் நேரடியான எதிரப்பினை காட்டுகின்றனர் இது வரவேற்கதக்கது ஆனால் ஒரு சாரார் அப்பதிவுகளுக்கு இசைவாக பதிவிடுகின்றனர். இதில் தான் சந்தேகம் எழுகின்றது ???
நாம் தற்கொலை செய்து கொண்டால் அதன் பின்பு எமது சாவில் கண் மூக்கு வாய் வைத்து பேச வைப்பது எமக்கும் எமது குடும்பத்திறகும் எமது சமூகத்திற்கும் அழகு அல்ல. ஆகவே தற்கொலைகளை தவிர்ப்போம் பிரச்சினைகளை சமாளிப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை எமது உளவியல் ஆலோசனை மையம் மூலம் ஆரம்பகட்டமாக பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.
இதற்கு குழுக்கள் அடிப்படையில் தன்னார்வலர்கள் தேவை.
அதில் சமூக செயற்பாட்டாளர்கள் இருவரும், உளவியல் ஆலோசனையாளர்கள் இருவரும், எமது மையத்தை சேர்ந்த ஒருவருமாக 5 பேர் கொண்ட குழு.
இங்கு வக்கிரம் என குறிப்பிடப்படுபவை கள், களவு, காமம்,கொலை,பொறாமை
மட்டக்களப்பில் தற்கொலை செய்தால் என்ன நடக்கின்றது தெரியுமா ?
Reviewed by Viththiyakaran
on
11:43 AM
Rating:
No comments:
Post a Comment