இலங்கைத் தீவின் ஆதிக்குடியினர் சீனர்களா ?

இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளுக்கு எதிராக வெற்றி பெற்றமைக்கு மிகப் பெரிய பங்களிப்புச் செய்த சீனா தற்போது இலங்கை அரசியலிலும் மொழி தொடர்பான செயற்பாடுகளிலும் அதிகமான ஆர்வத்தை காட்டிக் கொண்டு வருகின்றது.

உதாரணமாக வடிவேல் நடித்து வெளியான தென்னாலிராமன் திரைப்படத்தில் பொருட்கள் விற்க வந்த சீனர்கள் அந்த ஊர் மக்களை அடிமையாக்கியது போன்ற செயற்பாடு இலங்கைத் தீவிலும் சிறிது சிறிதாக கட்டவிழ்க்கப்பட்டு வரப்படுகின்றது.இது  இலங்கை அரசியல்வாதிகளின் முட்டாள்தனமாக அல்லது சீனாவின் நாடு பிடிக்கும் தந்திரமான எனத் தெரியவில்லை.

எவ்வாறு இருப்பினும் இலங்கையில் தமிழ் சிங்களம் என்கின்ற இரு கரும மொழிகள் இருக்கின்ற வேளையிலேயே ஆயிரம் பிரச்சினைகள் எம்மை சுற்றி நடந்தேருகின்றன. அவற்றுக்கிடையில் புதியதொர் மொழியாக சீன மொழியினை தற்போது நாட்டின் பிரதான பிரதேசங்களில் காண முடிகின்றது. இவ்வாறானதோர் நடவடிக்கை இலங்கையின் பிரதான மொழி பேசும் மக்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்துகின்றது.


இலங்கையில் வாழ்பவர்களில் அண்ணளவாக  நான்கில் ஒருபங்கினரே  தமிழ் சிங்களம் என பாண்டித்தியம் கொண்டு காணப்படுகின்றனர். ஏனைய பங்கினர் சுதேச மொழியில் மாத்திரம் பாண்டித்தியத்துடன் காணப்படுகின்றனர். இதற்கிடையில் புதிதாக சீன மொழி யாருக்காக இம் மொழி இலங்கையில் பயன்படுத்துப்படுகின்றது. அதிலும் அரச கரும மொழியாக காணப்படும் தமிழ் மொழியினை நீக்கிவிட்டு.


இவ் விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கட்டுரைகள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் இதனை தட்டிக் கேட்ட வேண்டிய எமது பிரதேச பிரதிநிதிகள் மௌனிளாகவே காணப்படுகின்றனர்.அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைத் தீவின் ஆதிக்கூடிகள் இயக்கர் மற்றும் நாகர் என்பதனை மறைத்து சீனர் என மாற்றிவிடவேண்டும்.


இலங்கைத் தீவின் ஆதிக்குடியினர் சீனர்களா ? இலங்கைத் தீவின் ஆதிக்குடியினர் சீனர்களா ? Reviewed by Viththiyakaran on 5:10 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.