சித்திரையில் நல்ல கிலு கிலுப்பான் கிலு கிலுப்பான் !

உண்மையில் காடுகட்டி என்பது சித்திரை வருடப்பிறப்பு காலத்தில் நகைச்சுவை உணர்வோடு மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான ஒர் களம். சித்திரை வருடப்பிறப்பிற்கு அடுத்துவரும் நாட்களில் ஒர் குறிப்பிட்ட நபரை ஆலையிலைகள், காவுலா, புற்கள், கிளசேறியா போன்ற பற்றைகளைக் கொண்டு உடல் முழுவதும் மறைத்து, குறைந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் குறித்த காடுகட்டின நபரை ஒவ்வொரு வீடாக அழைத்துவருவார்கள். அவருக்கு வழிகாட்டுவதற்கு ஒரு கம்பைக்கொடுத்து ஒருவர் முன்னுக்கு நடந்துவர காடுகட்டப்பட்டவர் மெல்ல மெல்ல அசைந்து வரும் போது டோலக், மத்தளம் போன்ற இசை வாத்தியங்கள் அடித்துக்கொண்டு, சினிமாப்பாடல்களையும் பாடி, ஆடி வருவார்கள்.
அவருக்கு பக்க இசையாக மற்றவர்கள் கைதட்டி உற்சாகம் கொடுத்து வருவார்கள். காடுகட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் போய் நடனமாடி மக்களை மகிழ்விப்பார்கள். முற்காலங்களில் இந்த காடுகட்டி ஆடுவதற்கு கூத்துப்பாடல்களை பாடியதாகவும் பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றோம்.

ஆனால் தற்போது இவ்வகையான மரபுகள் நவீன மாற்றங்களினால் அருகிவருகின்றது என்பதனை விட எமது பகுதியில் அழிந்துவிட்டது என்றே கூறவேண்டும்.




சித்திரையில் நல்ல கிலு கிலுப்பான் கிலு கிலுப்பான் ! சித்திரையில் நல்ல கிலு கிலுப்பான்  கிலு கிலுப்பான் ! Reviewed by Viththiyakaran on 9:53 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.