காளான் வளர்ப்பது எவ்வாறு ?


உலகில் அறுவதாயிரம் வகைகளுக்கு மேற்பட்ட காளான் வகையினங்கள் காணப்படுகின்றன இதில் குறிப்பிட்டதோர் வகையினங்களே பயிரிடப்பட்டு குடிசைக் கைத்தொழிலாக மேற்  கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.








அந்த வகையில் உணவிற்கு பயன்படுத்தப்படும் பிரபல்யமான காளான் வகைகள்
  1. சிப்பிக் காளான்
  2. பால் காளான்
காளானினால் ஏற்படும் நன்மைகள்
  • காளான் ஆனது சைவப்பிரியர்களுக்கான மாமிச உணவாக காணப்படுகின்றது.
  • காளானில் அதிக புரதச் சத்து காணப்படுகின்றது.
  • இதன் மூலம் இருதயநோய்கள், புற்றுநோய்கள் என்பன தவிர்க்கப்படுகின்றன.
  • வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச்சத்து க்களும் நிறைந்திருக்கின்றன.

காளான் படுக்கையினை தயாரிப்பது எவ்வாறு

  • காளான் வளர்ப்பிற்கு அடிப்படையாக காணப்படுவது வைக்கோலாகும் .அறுவடை செய்யப்பட்டு ஆறுமாதத்திற்கு உட்பட்ட வைக்கோலினை தெரிவு செய்வது மிகச் சிறந்து ஆகும். இதற்கு காரணம் காளான் வளர்ச்சி அதிகமாக மேற்கொளப்படுவதற்கேயாகும்.
  • தெரிவு செய்யப்பட்ட வைக்கோலினை இரண்டு அல்லது மூன்று அங்குலத்திற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும் இதற்கு காரணம் காளான் படுக்கையினை இலகுவாக மேற்கொள்வதற்கேயாகும்.
  • நறுக்கப்பட்ட வைக்கோல் துண்டுகளை நான்கு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை தண்ணீரில் நன்றாக ஊறவிட வேண்டும்.
  • ஊறவிட்ட பின்பு அதனை  இரண்டு தொடக்கம்  மூன்று மணித்தியாலங்கள் வரை நன்றாக அவிக்கவேண்டும்.
  • நீரை வடித்து இறக்கிய வைக்கோல் துண்டுகளை ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்கள் வரை நன்றாக உலரவிட வேண்டும் குறிப்பாக வைக்கோல் துண்டுகளை பிழிந்து பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் நீர் வழியாது கைகளில் ஈரத்தன்மை காணப்பட வேண்டும்.
  • அதன் பின்பு பொலித்தினால் உருவாக்கப்பட்ட பையில் வைக்கோலினை ஐந்து தொடக்கம் ஏழு அங்குலத்திற்கு அடித்தளத்தினை அமைத்துக் கொண்டு அதன் மேல் காளான் விதைகளை இட்டு மீண்டும்  வைக்கோலினை மூன்று தொடக்கம் நான்கு அங்குலத்திற்கு வைக்கோலினை இட்டு  பை நிரம்பும் வரை பொதியிட வேண்டும்.
  • அதன் பின்பு காளான் படுக்கையினை சுற்றி  சிறிய துளைகளை இட்டுக் கொள்ள வேண்டும்.




இறுதியாக  எமது வீட்டில் உள்ள ஓர் இருட்டு அறையில் காளான் படுக்கைகளை வைத்து விட வேண்டியதுதான் பின்னர் பதினெட்டு தொடக்கம் இருபது நாட்களுக்குள் காளான் அறுவடையினை மேற்கொள்ள முடியும்.


முக்கிய குறிப்பு : காளான் வளர்ப்பினை வைக்கோலில் மட்டுமல்ல தும்பு, மரத்தூசி போன்றவற்றிலும் காளான் வளர்ப்பினை மேற்கொள்ள முடியும்.



காளான் வளர்ப்பது எவ்வாறு ? காளான் வளர்ப்பது எவ்வாறு ? Reviewed by Viththiyakaran on 9:19 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.