இந்தியாவை வென்று வரலாற்று சாதனை படைத்த மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரி


இலங்கை எறிபந்து சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையிலான எறிபந்து(Throw Ball) சுற்றுப்போட்டியானது பங்குனி மாதம் 20,21 ஆம் திகதிகளில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா (பெங்களூர் ) அணிகளுக்கிடையிலான போட்டியில் மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரியும், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயமும், இந்தியா பெங்களூர் அணியும் பங்குபற்றியது.

இறுதி எறிபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இந்தியாவுடன் மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி மோதிய வேளை முதலாவது சுற்றில் 15, 25 புள்ளிகளையும், இரண்டாம் சுற்றில் 15, 25 புள்ளிகளையும் பெற்று மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரி அபார வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியானது மிக நீண்ட நேரப்போட்டியாக அமைந்தது. இந்திய அணி மிகவும் திக்குமுக்காடி இரண்டு சுற்றுக்களில் 15 புள்ளிகளையே பெற்றது. இந்தியாவின் பிரதான விளையாட்டுக்களில் எறிபந்து மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிடத்தக்க அதேவேளை இப்போட்டியில் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றியினை சுவிகரித்துக்  எமது நாட்டிற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்து  வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.







இந்தியாவை வென்று வரலாற்று சாதனை படைத்த மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரி  இந்தியாவை வென்று வரலாற்று சாதனை படைத்த மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரி Reviewed by Viththiyakaran on 10:09 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.