முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
சக்தி இருக்கிறது.அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000 சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..
படித்ததும் பகிரவும். இது நமது கலாச்சார உண்மை.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" - அறிவியல் உண்மை
Reviewed by Viththiyakaran
on
10:33 AM
Rating:
Reviewed by Viththiyakaran
on
10:33 AM
Rating:


No comments:
Post a Comment