புதுவருடத்தினை வரவேற்க மதுபானசாலையில் மக்கள் கூட்டம்

குடி குடியைக் கெடுக்கம் என சிறு பருவத்திலிருந்தே முறைசார் மற்றும் முறைசாரா வழிகளில் மூலம் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் அக் கருத்தினை ஏற்பதற்கோ அல்லது அதனை பின்பற்றுவதற்கோ எமது மனம் முனைவதில்லை. மாறாக மதுப்பாவனை எமது சமூத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நாளை தமிழ்,சிங்கள புதுவருடம் மலரவுள்ளது இதனால் இந்த இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் மதுபான சாலைகள் விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.இதனால் எமது பிரதேச மக்கள் பிறக்கவுள்ள விளம்பி வருடத்தினை அதிவிஷேடமாக கொண்டாடுவதற்காக நேற்று மதுபானசாலைகளில் திரள் திரளாக வரிசையில் குழும்பியிருந்தமையிமை காணக்கூடியதாயிற்று.

இவ்விடயமானது எமது சமூகத்திற்கும் எமது எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானது அல்லது.இது தொடர்பாக மேலும் அறியக்கிடைத்த விடயங்கள் யாதேனில் சாதாரணமாக மதுபானங்களை வாங்குபவர்கள் மதுபானங்களை தேக்கி வைப்பதற்றகாக  அதிகளவில் கொள்வனவு செய்ததாகவும் மற்றும் மதுபான வியாபர உரிமையாளர்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்திய ஒரு புதுவருட ஆரம்பம் என குறிப்பிடப்படுகின்றன.
புதுவருடத்தினை வரவேற்க மதுபானசாலையில் மக்கள் கூட்டம் புதுவருடத்தினை வரவேற்க மதுபானசாலையில் மக்கள் கூட்டம் Reviewed by Viththiyakaran on 8:09 PM Rating: 5

Post Comments

Powered by Blogger.