ஒளியால் மிளிர்கின்றது கல்லடிப் பாலம்

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகர ஒளியாக்கல் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று கல்லடி பாலத்தில் இடம்பெற்றது. கல்லடி பாலத்தில் ஒளிரா நிலையில் இருக்கின்ற வீதி மின்குமிழ்களை ஒளிரச் செய்யும் வேலைப்பாடு மட்டக்களப்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்செயற்பாட்டினை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அவ்விடம் விஜயம் செய்து மேற்படி வேலைப்பாட்டினைப் பார்வையிட்டனர்.

பல காலமாக ஒளிர்ந்தும், ஒளிரா நிலையில் இருந்த இக் கல்லடிப்பால வீதி மின்குமிழ்களால் மக்களின் போக்குவரத்து மிகவும் பாதிப்புற்றிருந்தது.

இதன் பிரகாரம் மாநகர சபை பொறுப்பேற்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர எல்லைக்குள் இருக்கும் வீதி மின்குமிழ்கள் அனைத்தையும் ஒளிரச் செய்து மாநகரத்தை ஒளிமயமாக ஆக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணக்கருவின் முதற்கட்டமாக மேற்படி வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஒளியால் மிளிர்கின்றது கல்லடிப் பாலம் ஒளியால் மிளிர்கின்றது கல்லடிப் பாலம் Reviewed by Viththiyakaran on 9:17 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.