போக்குவரத்தினால் ஏற்படும் சூழல் மாசடையும் வீதத்தை குறைப்பதற்கான சரியான உக்தியாக புகையிரத போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்தலும் நாடு பூராகவும் விரிவாக்கும் செயலயே கருதலாம்.
அத்தகைய பொன்னான போக்குவரத்து சேவை இலங்கையில் இருக்க காரணமான பிரித்தானியருக்கு நன்றி சொல்ல என்றென்றும் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
1858இல் ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகளை கடந்துள்ளது இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம். இது அரசிற்கு இலாபத்தை ஈட்டக்கூடிய ஒரு துறையாகும். இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டத்தில் முழுமையான பங்களிப்பு எம் முன்னோர்களை ஆட்சி செய்தவர்களாலேயே வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரயில்வே இலங்கைக்கு கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு எதிராக பல முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தாலும். இதற்கு முன் இந்தியாவில் ஒரு புகையிரத பாதையை கட்டியமைத்த W F Faveill அவர்கள் பிரிட்டனின் உதவியுடன் கட்டுமானப்பணிகளை ஆரம்பித்தார். இதன் முதற்கட்டம் கொழும்பிற்கும் அம்பேபுஸ்விற்கும் இடைப்பட்டதாக இருந்தது. இந்த நீளத்தின் மிகவும் கடினமான பகுதி 53 வது மைல் முதல் 65 மைல் வரை இருந்தது,12 மைல்களுக்கு சாய்வு 44 இல் ஒன்று (1/44)என செங்குத்தானதாக இருந்தது. 10 சுரங்கங்கள் வெட்டப்பட்டிருந்தன, இதில் மிகநீளமானது 1,095 அடி (338மீ) ஆகும்.
இலக்கை அடைவதற்காக மூவாயிரம் பேர் மலேரியா, காலரா, பாம்புகடி மற்றும் இடுப்புக்குள்ளான காடுகள் மற்றும் பருவ மழைகள் போன்ற பல இன்னல்களையும் கடந்து வேலை செய்தனர். இருந்தும் மலேரியா போன்ற நோய்கள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தின.மேலும் இங்கு வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினமானவொன்றாக இருந்ததால் தென்னிந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்கள் கொண்டுவரப்பட்டார்கள்.
அனைத்து உபகரணங்களும் பிரித்தானியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது எனவே மேலும் காலதாமதம் ஏற்பட்டிருந்த போதிலும் வேலை முடிந்ததாக அக்கால வீதி மற்றும் புகையிரத பாதை கட்டுமானங்களுக்கு பொறுப்பதிகாரியான தோமஸ் ஸ்கின்னரின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச் சேவை தேயிலை, கோப்பி போன்றவற்றை மலைநாட்டிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவர தொடங்கப்பட்டு குறித்த சில ஆண்டகளிலேயே முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபம் ஈட்டக்கூடியதொன்றாக நிலைபெற்றது. மேலும் இவை பொருளாதார, வர்த்தக நோக்கை மட்டும் கருதாமல் மக்களுக்கு சேவை வழங்கும் நோக்குடனும் தொழிற்பட தொடங்கியது.
1867ல் கண்டிவரை 1874ல் நாவலப்பிட்டி 1885ல் நானுஓயா 1894ல் பண்டாரவளை என 1924ல் பதுளைவரையும் இப் புகையிரதபாதை நீட்டப்பட்டது. அத்தோடு 1880ல் மாத்தளை 1905ல் வடக்கு
1914ல் மன்னார் 1926ல் புத்தளம் 1928ல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கும் புகையிரதப்பாதை போடப்பட்டது. இருந்தும் கடந்த 90 ஆண்டுகளாக புதிதாக எந்தவொரு புகையிரத பாதையும் இடப்படவில்லை.
1953வரை நீராவி என்ஜின் பாவனையிலிருந்தது பின்னர் டீசல் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை டீசல் என்ஜின் பாவனையே உள்ளது இருந்தும் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதே தவிர பாரியதொரு மாற்றம் ஏற்படவில்லை.
தென்னிலங்கையில் அன்றாட போக்குவரத்திற்காக புகையிரதத்தையே நம்பி பலரும் இருக்கின்றார்கள். ஆனாலும் ஏனைய பகுதிகளில் தலைநகருக்கு செல்வதற்கு புகையிரத போக்குவரத்தை விரும்புவர்களே அதிகம். இருந்தும் புகைவண்டி பயணத்தை அனுபவிக்காமல் நம்மில் பலரும் உள்ளனர்.உலகளவில் மணிக்கு 400கி.மீ ற்கும் (400kmph) அதிக வேகத்தில் புகையிரதம் இருந்தும் நாம் இன்னும் அந்த டீசல் என்ஜினும் அதே குலுங்கலுமாக சற்றும் மாறாத புகையிரத சேவையையே பாவித்துக்கொண்டு பாரிய மாற்றத்திற்காக எதிர்பார்புடன்...

பல மனித உயிர்களையும் உழைப்பையும் உறிஞ்சி இன்னும் உச்சகட்டத்தை அடையாத இலங்கை தும்பிர
Reviewed by Pavithran Manisegaran
on
1:30 PM
Rating:

No comments:
Post a Comment