சிறந்த பதிப்பாசிரியரும் மற்றும் ஊடகவியலாளருமான மகுடம் வி.மைக்கல்கொலினின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீடு

(சிவம்) 
சிறந்த பதிப்பாசிரியரும் மற்றும் ஊடகவியலாளருமான மகுடம் வி.மைக்கல்கொலினின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (20) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் 33 ஆவது தொடராக நடைபெற்ற இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவராக உள்ள மைக்கல்கொலின் தொன்மங்களையும், மறை நூல்களையும் மீட்டிப் பார்க்கும் நோக்கோடு பாரதத்தின் இரு கதைகள், இராமாயணம் மற்றும் வேதாகமத்தில் தலா 3 தொகுப்புகளையும், தமிழ் தேசிய அரசியல் மற்றும் ஞானம் என்பற்றை உள்ளடக்கிய பஞ்ச முகங்கள் கொண்ட பரசுராம பூமி 9 கதைகள் கொண்ட தொகுப்பாக உள்ளதாக தமிழர் தளம் இணை ஆசிரியர் ச. மணிசேகரன் நூல் அறிமுகத்தில் தெரிவித்தார்.
இத்தொகுப்பில் குருசேத்திரம் அரசியல் ரீதியாகவும், பரசுராம பூமி முள்ளி வாய்க்கால் பற்றியும், ஓர்மம் ஊர்நிலை பற்றி பெண்கள பேசும் பெண்களின் கதைகளும், பலம் மற்றும் இராவநாசம் என்பன தொகுக்கப்பட்ட அரமாக அடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா. உதயகுமார் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முதல் பிரிதியை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.
கவிஞர் அ.ச. பாய்வாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ;ட உதவிச் செயலாளர் வி.தவராஜா, திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு.கணேசராஜா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.







சிறந்த பதிப்பாசிரியரும் மற்றும் ஊடகவியலாளருமான மகுடம் வி.மைக்கல்கொலினின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீடு சிறந்த பதிப்பாசிரியரும் மற்றும் ஊடகவியலாளருமான மகுடம் வி.மைக்கல்கொலினின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீடு Reviewed by Unknown on 9:15 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.