மட்டக்களப்பு மாநிலத்தில் பேசப்படும் பழமொழிகளும் அதன் பொருளும்

அஞ்சனம் போட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது
அஞ்சனம் என்பது ஒரு வகையான மை இதனை அஞ்சனாதேவியினை நினைத்து மந்தீரித்து வெற்றிலையில் இட்டு பார்க்கும் போது பாதாளத்தில் புதைந்துள்ள புதையல்கள் மற்றும் தொலைந்த பொருட்கள் போன்றவற்றை தேடி அறிய முடியும் ஆனால்  அஞ்சனம் போட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது என்பது நாம்   தொலைந்த ஒரு பொருளினை எப்படி அல்லது எவ்வாறு தேடினாலும் கிடைக்காது.

ஆக்கின சோத்தையும் செத்த பிணத்தையும் வைத்திருக்க கூடாது
ஒரு பொருளை பயன்படுத்தப்பட வேண்டிய வேளையில் பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த தவறினால் அது வீணாக போய்விடும்

ஆத்திலே பேத்தை போல் ஊரிலே இது கழிவு
ஊரில் பொறுப்பில்லாமல்  எந்த வேலைக்கும் செல்லமால் கால்போல போக்கில் தங்களது காலத்தை கழிப்பவர்களை  குறிக்கும்

ஆபத்து கழிந்தால் வேலிக்குப் புறத்தி
ஆபத்து நேரத்தில் உதவி செய்யும் போது உதவி செய்பவர்கள உயர்வாகவும் ஆபத்து கழிந்த பின் அவர்களை தாழ்வாகவும் கருதுவது


உழைக்கிறவனுக்கு  கச்சி உறவாளிக்கு சோறு
ஒரு விடயத்தினை கஸ்டப்பட்டு செய்தவனுக்கு கிடைக்காத மரியாதை இடையால் வந்தவனுக்கு கிடைக்குமாம்.

ஒரு பிள்ளை பெற்றவர் ஒன்பது பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பாத்தாளாம் 
 அதிக அனுபம் கொண்ட ஒருவரிடம் அனுபவம் குறைந்த ஒருவர் தனது கருத்துக்களை  அல்லது செயற்பாடுகளை முதன்மையாக வெளிப்படுத்தல் எனப்படும்.

கடும் முறுக்குத் தெறிக்கும்
அதிகமாக ஒருவரிடம்  அக்கறை அல்லது பாசம் செலுத்துவம் போது அதுவே அவர்களுக்கு கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தும்

தானறியாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதம் 
ஒரு விடயத்தினை மேற்கொள்ளும் போது அது பற்றிய புலமையில்லை என்றால் அது எமக்கு ஆபத்தை கூட ஏற்படுத்தக் கூடும்.

நல்ல பாம்பு ஆட நாக்கிளியான் பாம்பு ஆடுது
பிறர் செய்வது போது போல நாமும் செய்வதனால் இருவரும் சமன் என கொள்ளமுடியாது

நான் போட்ட பீர்க்கங்கொட்ட  எனக்கு வடுப்பேசுது
நாம் உதவி செய்து வழிநடத்திய ஒருவர் எம்மைப்பற்றியே தவறாக பேசுவதனைக் குறிக்கும்
மட்டக்களப்பு மாநிலத்தில் பேசப்படும் பழமொழிகளும் அதன் பொருளும் மட்டக்களப்பு மாநிலத்தில் பேசப்படும் பழமொழிகளும் அதன் பொருளும் Reviewed by Viththiyakaran on 8:06 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.