புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும்

மட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலையினை மூடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனக்கோரி கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எதிராக 5 வது தடவையாக  ஜனாதிபதியிடம் சொல்வொம் என்ற தொணிப்பொருளிலான இந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.00 மணியளவில் குறித்த தொழிற்சாலை முன் ஒன்றுகூடிய பொதுமக்கள் தொழிற்சாலைக்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இவ் ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிதேசசபை உறுப்பினர்கள் தம்பிட்டிய ஞானானந்த தேரர்(மட்டக்களப்பு மாவட்ட பௌத்த பிக்குகள் சங்கத்தின் தலைவர்) என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்லரெட்ணம் வருகை தந்து இது தொடர்பாக தாம் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தொரிவித்ததையடுத்து ஆர்பாபட்டக்காரர்கள் ஆர்பாட்ட இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.






புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் Reviewed by Viththiyakaran on 10:36 PM Rating: 5

Post Comments

Powered by Blogger.